ரஷ்யாவின் எச்சரிக்கையை மீறி நேட்டோவில் இணைய பின்லாந்து விண்ணப்பம்

ரஷ்யாவின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி பின்லாந்து நாடாளுமன்றம் நேட்டோ கூட்டமைப்பில் இணையும் பரிந்துரைக்கு ஆதரவாக வாக்களித்தது. இதனைத் தொடர்ந்து நேட்டோ உறுப்பினராக சேர்வதற்கு பின்லாந்து விண்ணப்பிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாயந்த இந்த வாக்கெடுப்பில் 188 எம்பிக்கள் நேட்டோவில் இணையும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தநர். எட்டு பேர் மட்டுமே எதிர்த்தனர். பின்லாந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்ட கால நட்பை சுட்டிக் காட்டி ரஷ்யா வலியுறுத்திய போதும் உக்ரைன் போருக்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டதாக பின்லாந்து பதில் அளித்துள்ளது. … Read more

தாய்க்கு தெரியாமல் செல்போனில் 31 பர்கர்களை ஆர்டர் செய்த 2 வயது குழந்தை

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கிங்ஸ்வில்லே பகுதியை சேர்ந்தவர் கெல்சி புர்க்கால்டர் கோல்டன். இவரது 2 வயது மகன் பார்ரெட். இவன் தாயின் செல்போனை வாங்கி விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது செல்போனில் இருந்த உணவு ஆர்டர் செய்யும் ஆப் மூலம் மெக்டொனால்டு கடையில் 31 சீஸ் பர்கர்களை குழந்தை பார்ரெட் ஆர்டர் செய்தான். சிறிதுநேரத்தில் 31 சீஸ் பர்கர்களுடன் ஊழியர் கெல்சி வீட்டுக்கு வந்தார். தான் பர்கர் ஆர்டர் செய்யாததால் திகைத்த கெல்சி, மகனிடம் இருந்த செல்போனை … Read more

காதலியைக் கொன்று சடலத்தை புதைக்கும் போது இறந்த காதலன்

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில், காதலியை கொன்ற ஒருவர் இறந்த விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  காதலியை கொன்று புதைக்கும் செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போன சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காதலியின் கழுத்தை நெரித்து கொலை இந்த விசித்திர சம்பவம் அமெரிக்காவில் நடந்ததாக, ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. தென் கரோலினாவைச் சேர்ந்த ஜோசப் மெக்கின்னன் என்ற 60 வயது என்பவர் தனது 65 வயது காதலியான பாட்ரிசியா டென்ட்டை கழுத்தை நெரித்து … Read more

அதிகரிக்கும் கரோனா: கடந்த வார நிலவரம் குறித்து உலக சுகாதார நிறுவன இயக்குநர் கவலை

ஜெனீவா: உலகளவில் கடந்த வாரம் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்,”கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் 4ல் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. சோதனைகளும், மரபணு பகுப்பாய்வு சோதனைகளும் கூட உலகளவில் குறைந்துள்ளன. இதனால், கரோனா வைரஸ் இப்போது எந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. அது எவ்வாறாக உருமாறி வருகிறது என்பதை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வட கொரியாவில் … Read more

132 பேரை பலிகொண்ட சீன விமானம் திட்டமிட்டே விபத்துக்குள்ளாக்கப்பட்டதா? கருப்புப் பெட்டியின் பதிவுகளை ஆய்வு செய்த அமெரிக்க நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்..!

கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி 132 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய சீன விமான விபத்து குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்த அமெரிக்க அதிகாரிகள் அந்த விமானம் இறுதிக் கணங்களில் வேண்டுமென்றே செங்குத்தாக தரையை நோக்கி செலுத்தப்பட்டதாக கண்டறிந்துள்ளனர். விமானியின் அறையில் உள்ள யாரோ கட்டளையிட அந்த விமானம் அப்படி தரையை நோக்கி செலுத்தப்பட்டது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 29 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 90 … Read more

பாகிஸ்தானில் காட்டுத்தீ முன்பு ‘டிக்டாக்’ வீடியோ எடுத்த பெண் மாடல் சர்ச்சையில் சிக்கினார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஹூமைரா அஸ்கர். நடிகை மாடலான இவர் வீடியோக்களில் நடித்து அதனை டிக்டாக் வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அவரை 1.10 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். இந்த நிலையில் ஹூமைரா அஸ்கர், காட்டுத்தீ முன்பு டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த வீடியோவில் காட்டுத்தீ பற்றி எரியும்போது, அதற்கு முன்னால் ஹூமைரா அஸ்கர் ஒய்யாரமாக நடந்து செல்கிறார். அந்த வீடியோவை ‘நான் எங்கிருந்தாலும் நெருப்பு வெடிக்கும்’ என்ற தலைப்பில் … Read more

திட்டமிட்டே வீழ்த்தப்பட்டதா சீன போயிங் விமானம்? – கருப்புப் பெட்டி ஆய்வில் எழுந்த சந்தேகங்கள்

பீஜிங்: கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளான சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி டேட்டாவின் படி விமானம் திட்டமிட்டே வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வூஸுநகருக்கு கடந்த மார்ச் 21-ம் தேதி மதியம் புறப்பட்ட நிலையில், குவாங்சூ மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிக்கு மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து … Read more

கான்ஸ் திரைப்பட விழாவில் இந்திய நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு.. கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்பு..!

பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் சிவப்புக் கம்பள மரியாதையை இந்தியாவில் இருந்து சென்ற திரையுலக ஆளுமைகள் ஏற்றுக் கொண்டனர். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நடிகர்கள் கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக், சேகர் கபூர், மாதவன் உள்ளிட்டோருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் சிவப்புக் கம்பள மரியாதையை ஏற்றார். இந்த விழா இந்தியத் திரையுலகினரை கௌரவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டிருப்பதால் மிகவும் பெருமையாக உணர்வதாகக் கூறினார் ஏ.ஆர்.ரகுமான். அவர் முதன்முறையாக இயக்கிய 36 நிமிட குறும்படம் இந்த விழாவில் … Read more

சினிமா உலகத்திற்கு புதிய சார்லி சாப்ளின் தேவை – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு

கேன்ஸ்: 2022ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நேற்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர். கேன்ஸ் திரைப்படத்தின் தொடக்க விழாவில், யாரும் எதிர்பாராத வகையில் ரஷிய போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும் வீடியோ ஒளிபரப்பபட்டது. அதில் பேசிய ஜெலன்ஸ்கி கூறியதாவது:- ‘தினம் நூற்றுக்கணக்கான மக்கள் மடிகின்றனர். இவற்றை பார்த்துகொண்டு சினிமா அமைதியாக இருக்குமா? அல்லது உரக்க பேசுமா?  ஒரு சர்வதிகாரி இருந்தால், சுதந்திரத்திற்கா போர் நடைபெற்றால், அனைத்தும் … Read more

சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்திற்குள்ளாக்கப்பட்டது: அறிக்கை

கடந்த மார்ச் மாதம் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் விபத்து விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து நிலையில், அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  கடந்த மார்ச் மாதம்  133 யணிகளுடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 133 அனைவரும் உயிரிழந்தனர்.  விமானம் தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான டெங்சியன் கவுண்டி என்னும் வமலைப் … Read more