ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது – ரனில் விக்ரமசிங்கே பேச்சு

கொழும்பு: இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே  இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 … Read more

இனி தொடர்வது எங்கள் மதிப்புக்கு இழுக்கு… McDonald's எடுத்த முக்கிய முடிவு

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் முடிவில்லாமல் தொடரும் நிலையில், ஃபாஸ்ட்ஃபுட் உணவக சங்கிலியான மெக்டொனால்டு  நிறுவனம் திங்களன்று தனது ரஷ்ய வணிகத்தை விற்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகக் கூறியது. நிறுவனம் ரஷ்யாவில் 850 உணவகங்களைக் கொண்டுள்ளது, இதில் 62,000 பேர் பணியாற்றுகின்றனர். உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து வெளியேறும் மற்றொரு பெரிய மேற்கத்திய நிறுவனம் மெக்டொனால்டு. போரினால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடியை சுட்டிக் காட்டிய  மெக்டொனால்ட் நிறுவனம், ரஷ்யாவில் வணிகம் செய்வது இனி மெக்டொனால்டின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் … Read more

ரஷ்ய படைகளைத் தடுக்க செயற்கை வெள்ளத்தை ஏற்படுத்திய உக்ரைன் வீரர்கள்..!

உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி முன்னேறி வந்த ரஷ்ய படைகளை தடுத்து நிறுத்துவதற்காக திறந்து விடப்பட்ட அணையால் இன்றளவும் டெமிடிவ் கிராமம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. போர் ஆரம்பித்த போது, ரஷ்ய படைகளை தடுப்பதற்காக இர்பின் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை உக்ரைன் ராணுவத்தினர் திறந்து விட்டு செயற்கை வெள்ளத்தை ஏற்படுத்தினர். கீவ் நகரை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்ட ரஷ்ய படைகள் தற்போது டான்பாஸ் பகுதி நோக்கி தங்கள் கவனத்தை திசை திருப்பின. 2 மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன்னை கொல்வதற்கு பாகிஸ்தானிலும் வெளிநாட்டிலும் சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறியது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சமீபத்தில் சியால்கோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், “என் உயிரை பறிக்க சதி நடக்கிறது. இந்த சதி குறித்து சில நாட்களுக்கு முன்பு எனக்கு முழுமையாக தெரியவந்தது. மூடிய அறைகளில் எனக்கு எதிராக இங்கும் வெளிநாடுகளிலும் சதித் திட்டம் தீட்டப்படுகிறது. அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு வீடியோ பதிவு செய்துள்ளேன். எனக்கு … Read more

இந்தியாவைக் குறை கூறுவதால் பிரச்சனை தீராது…ஜி-7 நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த சீனா

உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும் கோதுமை ஏற்றுமதிக்குத் உடனடியாகத் தடை விதிப்பதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அறிவித்தது. மேலும் அரசு மூலம் ஏற்றுமதி செய்வதால் உண்மையாக உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜி-7 நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவை விமர்சித்த ஜி-7 நாடுகளுக்கு சீனா … Read more

வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் – ஐ.நா., சொன்ன ஷாக் நியூஸ்!

உலக அளவில் வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாதல், வறட்சி தினம் ஜூன் மாதம் 17 ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒப்பந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த இரண்டு … Read more

பிரான்சில் கற்பனை உலகத்தை மையமாக வைத்து நடைபெற்ற பிரம்மாண்ட திருவிழா..!

பிரான்சில் உள்ள லீலி நகரத்தில் கற்பனை உலகத்தை மையமாக வைத்து நடைபெற்ற பிரம்மாண்ட உட்டோப்பியா திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மனிதர்களுக்கும் மற்ற உயினங்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பு திருவிழாவில் பறக்கும் மீன் பொம்மை, வண்ணமயமான குதிரை, முயல் பொம்மைகள், மனித உருவத்தை போல் வடிவமைக்கப்பட்டிருந்த ராட்சத மரப்பாச்சி பொம்மை, நோய்வாய்ப்பட்ட டோடோ பறவை, கடல்குதிரை மற்றும் சிமெரா விலங்கு பொம்மைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இசை மற்றும் நடனக்கலைஞர்கள் அவற்றுடன் சென்று … Read more

நேட்டோ நாடுகளின் அமைப்பில் இணைகிறது ஸ்வீடன்- பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதம்

ஸ்டாக்ஹோம்: உக்ரைன்-ரஷியா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷியாவின் அண்டை நாடுகளான ஸ்வீடனும், பின்லாந்தும் நேட்டோ அமைப்பில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்நிலையில், நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக, ஸ்வீடன் பாராளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.  பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் பேசுகையில், நாட்டின் பாதுகாப்புக் கொள்கை வரிசையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை காண்பதாக தெரிவித்தார். நேட்டோவில் அங்கம் வகிக்கும்போது, முறையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஸ்வீடனுக்குத் … Read more

அதிகாரிகளை விமர்சித்த கிம்; ராணுவம் மூலம் மருந்து விநியோகம்: தென் கொரியா உதவி

பியோங்யாங்: வட கொரியாவில் கரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அதிபர் கிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.மேலும் கரோனாவை தடுக்க மக்களுக்கு மருந்துகளை உடனடியாக விநியோகம் செய்யுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். வட கொரியாவில் மருந்தகம் ஒன்றில் அதிபர் கிம் நேரடியாக பார்வையிட்டபோது அங்கு மருந்து பற்றாக்குறை உள்ளதை அவர் நேரிடையாகக் கண்டார். இதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் ஓன்றை நடத்தினார். அக்கூட்டத்தில் அதிபர் கிம் அதிருப்தி அடைந்து காணப்பட்டதாக வட கொரிய ஊடகங்கள் செய்தி … Read more

தடுப்பூசி செலுத்தாத வட கொரியாவில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் ; பாரம்பரிய வைத்திய முறைகளை பின்பற்றும் பொதுமக்கள்

வடகொரியாவில் யாரும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நிலையில், கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் மக்கள் உப்பு தண்ணீரால் வாய் கொப்பளிப்பது, மூலிகை தேநீர் அருந்துவது உள்ளிட்ட பாரம்பரிய வைத்திய முறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர். வட கொரியாவில், இதுவரை 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் காய்ச்சல் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 நாட்களில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நோயாளிகள் தனிமைப்படுத்திகொள்ளுமாறு மட்டும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது காய்ச்சல் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளுமாறு … Read more