8.20 லட்சம் பேருக்கு காய்ச்சல்வட கொரிய மக்கள் கடும் பீதி| Dinamalar

சியோல்,-வட கொரியாவில், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 8.20 லட்சத்தை கடந்து உள்ளது. இதனால், வட கொரிய மக்கள் அச்சம்அடைந்துள்ளனர்.உலகம் முழுதும், 2020ல் கொரோனா பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக, தங்கள் நாட்டில், ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என, வட கொரியா தெரிவித்தது. இந்நிலையில், அங்கு கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி … Read more

இலங்கையில் 21-வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வர முயற்சி – ரணில் விக்கிரமசிங்கே தகவல்

கொழும்பு, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் இலங்கையின் பிரதமராக 6-வது முறையாக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார். இது குறித்து கொழும்புவில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இலங்கைக்கு … Read more

கறுப்பினத்தைச் சேர்ந்த 10 பேரைசுட்டுக் கொன்ற அமெரிக்க இளைஞர்| Dinamalar

பபல்லோ-அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பல்பொருள் அங்காடியில், 18 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கறுப்பினத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகினர்; மூவர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், பபல்லோ நகரில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் வந்தார். ராணுவ உடை அணிந்து, அதன் மேல் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத, ‘புல்லட் புரூப்’ உடை அணிந்திருந் தார். தலையில் அணிந்திருந்த ‘ஹெல்மெட்’டில், ‘கேமரா’ பொருத்தப்பட்டு இருந்தது. திடீரென துப்பாக்கியை எடுத்த இளைஞர், கறுப்பினத்தவர்களை … Read more

இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு விக்ரமசிங்கே ‘திடீர்’ ஆதரவு

நிராகரிப்பு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி விலகினார். அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக கலவரம் வெடித்தது. கடந்த 12-ந் தேதி, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார். அவர் இடைக்கால அரசில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் அவரது அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன. அதே சமயத்தில், ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி, ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்தது. … Read more

இலங்கை நிதி நெருக்கடி குறித்து புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று விளக்கம்

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், இலங்கையில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். தொடர்ந்து நான்கு அமைச்சர்களை அவர் நியமித்தார்.  அதன்படி பொது நிர்வாக அமைச்சராக தினேஷ் குணவர்தன, வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜி.எல்.பெரீஸ், நகர அபிவிருத்தி அமைச்சராக பிரசன்ன ரணதுங்க, மின்சக்தி மற்றும் … Read more

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் சாவு

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள மீரான் ஷா பகுதியில் நேற்று காலை ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. இந்த … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபருடன், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சந்திப்பு

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். ஷேக் கலீஃப்பாவின் இறுதிச் சடங்கு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.  அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில்,ஷேக் கலீஃபா மறைவுக்கு இந்தியாவின்  சார்பாக அஞ்சலி செலுத்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அபுதாபி சென்றார். அபுதாபியில் உள்ள முஷ்ரிப் அரண்மனையில்,  ஐக்கிய அரபு அமீரகத்தின் … Read more

அமெரிக்காவில் பறக்கும் தட்டுக்கள் குறித்த வழக்கு – மே17-ந் தேதி விசாரணை

வாஷிங்டன், இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது, விமானப்படை வீரர்கள் பலர் வானிலை சில மர்மமான பறக்கும் தட்டு வடிவிலான விமானங்களை பார்த்ததாக தகவல் தெரிவித்தனர். அவை உளவு விமானங்களாக இருக்கலாம் என அப்போது நம்பப்பட்டது. ஆனால் அதனை தொடர்ந்து அமெரிக்காவில் சாமானிய மக்கள் பலர் இது போன்ற பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக சாட்சியம் அளித்தனர்.  இது தொடர்பான புகைப்பட சாட்சியங்களையும் பலர் போலீசாரிடம் சமர்ப்பித்தனர். அவற்றில் பெரும்பாலானவை வானில் பறக்கும் பலூன்களாகவும், பாராசூட்களாகவும் இருந்தன. இருப்பினும் சில … Read more

அதிபருக்கு எதிரான போராட்டம்இலங்கை பிரதமர் ஆதரவு| Dinamalar

கொழும்பு-இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு, புதிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தன் ஆதரவை தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை, அன்னிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, ஏப்., 9 முதல் பிரதமர் அலுவலகம் அருகே பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் மீது முன்னாள் பிரதமர் … Read more