உக்ரைனில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல்.. சாலைகளில் சடலங்கள் சிதறிக்கிடக்கும் கோரக் காட்சிகள்..!

ரஷ்யாவின் கோர தாக்குதலால் உக்ரைனின் புச்சா ( Bucha) நகரில் சாலைகள் தோறும் அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் சிதறிக் கிடக்கும் கோரக் காட்சிகள் வெளியாகியுள்ளன. கீவ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் முழுமையாக விரட்டியடிக்கப்பட்டிருக்கும் நிலையில், உக்ரைனின் பதிலடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்யா அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் கீவ் மற்றும் செர்னிவ் பகுதிகளில் இருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள், தலைநகர் கிவ்வை ஒட்டிய புச்சா நகரில் … Read more

நெருக்கடியை தீர்க்க அனைத்து கட்சிகளுக்கும் இலங்கை அதிபர் அவசர அழைப்பு

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அமல்படுத்தப்பட்ட 36 மணி நேர ஊரடங்கு இன்று காலை முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நேற்று பதவி விலகினர். இந்நிலையில், இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் … Read more

வீழ்ச்சி அடைந்த இலங்கை.. பரிதவிக்கும் மக்கள்.. இந்தியாவுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் இன்றைய நிலை இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கையாகும். இலங்கையிடமிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்று டெலிகிராப் கட்டுரை கூறியுள்ளது. இலங்கை மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கஜானா காலியாகி விட்டது. நாடு திவாலாகி விட்டது. உலகம் முழுக்க கடன் வாங்கி வைத்து விட்ட ராஜபக்சே சகோதரர்களால் இன்று நாட்டை மீட்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மக்கள் பரிதவிக்கின்றனர். விலைவாசி விண்ணைத் தொட்டுள்ளது. இந்தியாவிடம் கடன் கேட்டு கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் சிங்கள ஆட்சியாளர்கள். இந்த … Read more

இலங்கையில் அனைத்து கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு

இலங்கையில் அனைத்து கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு அமைச்சரவையில் அனைத்து கட்சியினரையும் இணைத்து கொள்ள அதிபர் நடவடிக்கை பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து கட்சி அமைச்சரவை அமைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அனைத்து கட்சி அமைச்சரவை அமைக்க நடவடிக்கை அனைத்து கட்சியினரும் இணைந்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமென அதிபர் கோத்தபய ராஜபக்சே கோரிக்கை Source link

கொரோனா அதிகரிப்பால் 2 தடவை மருத்துவ பரிசோதனை: ராணுவம், மருத்துவர்கள் ஷாங்காய் விரைவு

முதன் முதலில் கொரோனா வைரஸ் தொடங்கிய சீனா தற்போது மீண்டும் உருமாறிய கொரோனோவால் சிக்கி தவிக்கிறது. கொரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த அந்த நாட்டில் கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளதால் பொது மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். இதை கட்டுப்படுத்த பல மாகாணங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபட்டு உள்ளது. சீனாவின் மிகச்சிறந்த பொருளாதார நகரமாக திகழும் ஷாங்காய் நகரில் தினமும் கொரோனோவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு முழு ஊரடங்கு அமலில் … Read more

'மவுனத்தைத் தவிர வேறு எதைக் கொண்டும் எங்களை ஆதரியுங்கள்' – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்

லாஸ் வேகாஸ்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் தங்கள் நாட்டை மவுனத்தைத் தவிர வேறு எதைக் கொண்டு வேண்டுமானாலும் ஆதரியுங்கள் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார். 64வது கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியின் பேச்சு அடங்கிய டேப் ஒளிபரப்பப்பட்டது. ஜான் லெஜண்ட்டின் ஃப்ரீ என்ற ஆல்பத்தை உக்ரைனிய பாடகர் மீக்கா … Read more

புதிய பிரதமர்: பாக்., எதிர்க்கட்சிகள் அறிவிப்பால் குழப்பம்!

பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன. இதனிடையே, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது கடந்த மாதம் 28ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் … Read more

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது நீதிமன்ற தீர்ப்புக்குட்பட்டது – பாகிஸ்தான் தலைமை நீதிபதி

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டது என்று தெரிவித்த தலைமை நீதிபதி, மாநில அரசுகள் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ரத்து செய்த துணை சபாநாயகர், மூன்று மாதங்களில் தேர்தலை நடத்த உத்தரவிட்டு நாடாளுமன்றத்தை கலைத்தார். இதனை அவசர வழக்காக எடுத்து முதற்கட்ட விசாரணையை நடத்திய தலைமை … Read more

22 பிரதமர்களை கண்ட பாகிஸ்தான் – யாரும் முழுமையாக 5 ஆண்டை நிறைவு செய்யாத அவலம்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் இதுவரையில் 22 பிரதமர்களை கண்டிருக்கிறது.  1947-ம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தபோது லியாகத் அலிகான் பிரதமராக பதவி ஏற்றார். அவர் ராவல்பிண்டியில் 1951, அக்டோபர் 16-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இவரை தொடர்ந்து, ஹுசைன் சஹீத் சுரதியும் 4 ஆண்டு 2 மாதங்கள் ஆட்சியில் இருந்தார். 1971-ல் பாகிஸ்தானின் 8-வது பிரதமராக பதவியேற்ற நூருல் அமின் 13 நாட்களே அந்த பதவியில் இருந்தார். பாகிஸ்தானில் குறைந்த நாட்கள் பிரதமராக இருந்தவர் இவரே. … Read more

கூண்டோடு ராஜினாமா செய்த இலங்கை அமைச்சரவை: அதிபர், பிரதமர் பிடிவாதம்

கொழும்பு: இலங்கையில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காத வகையில் வெடித்துவரும் நிலையில் இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது. அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர அனைவருமே பதவி விலகியுள்ளனர். மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே, மகன் நமல் ராஜபக்சேவும் ராஜினாமா செய்துள்ளனர். மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், பிரதமர் அலுவலகம் அதனை மறுத்தது.இந்நிலையில் பிரதமரும், அதிபரும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து … Read more