‘‘முற்றிலும் பயனற்றது’’-  சமூக ஊடகங்களை தடை செய்யும் இலங்கை அரசுக்கு ராஜபக்சே மகன் எதிர்ப்பு

கொழும்பு: இலங்கையில் சமூக ஊடகங்களை தடை செய்யும் அந்நாட்டு அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நமல் ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் … Read more

நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சாங்சுன், ஜிலின், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்நிலையில், சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், … Read more

பிரிட்டனில் ஒரே வாரத்தில் 49 இலட்சம் பேருக்கு கொரோனா..

பிரிட்டனில் மார்ச் 26ஆம் நாளுடன் முடிந்த வாரத்தில் மட்டும் 49 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் 43 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பிரிட்டன் புள்ளியியல் முகமை தெரிவித்துள்ளது. நாட்டு மக்களில் பதின்மூன்றில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவுடன் வாழும் திட்டப்படி தனிமைப்படுத்தல், இலவசப் பரிசோதனை ஆகியவற்றைக் கைவிட்டதும், ஒமிக்ரான் பிஏ.2 வகை கொரோனாவின் பரவல் அதிகரித்ததும் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.  Source link

கலிபோர்னியாவில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு- பலர் உயிரிழப்பு

சேக்ரமென்டோ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சேக்ரமென்டோ நகரில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 50 ரவுண்டுகள் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபரின் நிலை என்ன? என்ற தகவல் வெளியாகவில்லை.  துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ டுவிட்டரில் வெளியாகி உள்ளது. … Read more

வித்தியாசமான தந்திரோபாயங்களுக்கு ரஷ்யா முன்னுரிமை அளிக்கிறது! குற்றம் சாட்டும் உக்ரைன் அதிபர்

உக்ரைனில் நடந்த சண்டைக்கு மத்தியில், “முழு கியேவ் பிராந்தியத்தின்” கட்டுப்பாட்டை உக்ரைன் மீண்டும் பெற்றுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கன்னா மாலியர் தெரிவித்தார். “இர்பின், புச்சா, கோஸ்டோமெல் மற்றும் முழு கியேவ் பகுதியும் படையெடுப்பாளரிடமிருந்து விடுவிக்கப்பட்டது” என்று உக்ரைன் கூறுகிறது. ரஷ்ய ஷெல் தாக்குதல்களால் பெரும் அழிவை எதிர்கொண்ட நகரங்கள் விடுவிக்கப்பட்டதாக உக்ரைன் அரசு கூறுகிறது.. இர்பின் நகரில் குறைந்தது 280 பேர் வெகுஜன புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக புச்சாவின் மேயர் கூறினார். ரஷ்யப் படைகள் வடக்குப் பகுதிகளிலிருந்து படிப்படியாக … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு; 90 நாட்களுக்குள் தேர்தல்: நீதிமன்றத்தில் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்ற அதிபர் ஆரீப் அல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். 90 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்துக்கும் ஒதுக்கீடு குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிப்பு

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்த நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை திடீரென நிராகரித்த துணை சபாநாயகர், அதனை சட்டவிரோதமானது என அறிவித்தார். இதனை அடுத்து, பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்தும், 3 … Read more

லண்டனில் நவாஸ் ஷெரீப் மீது தாக்குதல்

லண்டன்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் நிறுவன தலைவருமான நவாஸ் ஷெரீப் லண்டன் நகரில் வசித்து வருகிறார். அவரை இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்த நபர் தாக்கியதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ‘இந்த தாக்குதலில் நவாஸ் ஷெரீப்பின் பாதுகாவலர் காயமடைந்தார். தாக்குதல் நடத்திய நபர் மற்றும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். பிடிஐ கட்சி அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டதால் பாகிஸ்தானில் அந்த கட்சிக்கு எதிராக … Read more

மகளிர் உலக கோப்பை; ஆஸ்திரேலிய அணி சாம்பியன்| Dinamalar

கிறைஸ்ட்சர்ச்: மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, சாம்பியன் பட்டத்தை பெற்றது. இது ஆஸி., அணி வெல்லும் 7வது உலக கோப்பையாகும். நியூசிலாந்தில் 12வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறுகிறது. இதன் இறுதிப்போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று (ஏப்ரல் 3) நடைபெற்றது. இதில் 6 முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் மோதின. இரு நாடுகளும் உலக கோப்பை இறுதிப்போட்டியில் கடைசியாக … Read more

கிரிக்கெட்டில் இருந்து அரசியல் வரை.. இம்ரான் கானின் ரீ ப்ளே

பாகிஸ்தானின் லாகூரில் 1952-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி பிறந்த இம்ரான் கான் ஆக்ஸ்போர்டில் உள்ள கெபிள் கல்லூரியில் பட்டப்படிப்பை பயின்றார். பள்ளி நாட்களிலேயே கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய இம்ரான் கான், தனது 16 வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். 1970-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அடுத்த பத்தாண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டராக உயர்ந்தார். 1981-ல் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இம்ரான் கான் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் அணி கடந்த … Read more