பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்கம்

பாகிஸ்தான் அரசு பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வாரைப் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்புக்குச் சில மணி நேரங்களுக்கு முன் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஞ்சாப் ஆளுநர் பதவி நீக்கம் குறித்துத் தகவல் அறிவித்த செய்தித் துறை அமைச்சர் பாவத் சவுத்ரி, எதற்காகப் பதவி நீக்கம் என்பது குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. புதிய ஆளுநர் யார் எனப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதுவரை பஞ்சாப் … Read more

உக்ரைனில் ஒரே இடத்தில் 300 உடல்கள் புதைப்பு: தெருக்களில் சிதறிக் கிடக்கும் உடல்கள்

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷிய படைகள் வெளியேறியதையடுத்து அங்கு உக்ரைன் வீரர்கள் மற்றும் மக்கள் சென்றனர். அப்போது தெருக்களில் பலரது உடல்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். புச்சாவில் ஒரு தெருவில் 20 ஆண்களின் உடல்கள் கிடந்தன. அவர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று புச்சா மேயர் அனடோலி பெடோருக் தெரிவித்தார். மேலும் அவர் அதிர்ச்சி தகவல் ஒன்றையும் தெரிவித்தார். … Read more

அமெரிக்காவில் கணேஷ பகவான் பெயரில் தெரு; இந்துக்களை கவுரவிக்கும் நியூயார்க் சிட்டி கவுன்சில்| Dinamalar

நியூயார்க்: அமெரிக்காவில் இந்துக்களை கவுரவிக்கும் வகையில் கணேஷ் கோயில் தெரு என பெயரிடப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க் நகரின் வட மத்திய பகுதியில் குயூன்ஸ்7 கம்யூனிட்டி மாவட்ட பிளஷ்சிங் நகரில் ஹோலி அவன்யூ , 45 வது அவன்யூ இடையில் அமைந்துள்ளது பெளனி தெரு. இந்த பகுதியின் சுற்றுபகுதியில் கொரியா, தைவான் மற்றும் இந்திய கலாசார மையங்கள் , வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளன. இங்கு வல்லப கணபதி தேவஸ்தானம் … Read more

உக்ரைனில் இருந்து அகதிகள் ரயில் மூலம் போலந்து வருகை.!

உக்ரைனில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு ரயில் மூலமாக போலந்து எல்லையில் உள்ள டவுணுக்கு வந்து சேர்ந்தனர். சூட்கேஸ்கள் உடைமைகளை சுமந்து வந்த அகதிகளை போலந்து எல்லை அதிகாரிகள் வழிநடத்திச் சென்று அவர்களின் குடும்பத்தினருடன் இணைத்து வைத்தனர். சொந்த பந்தங்களைக் கண்டு அந்த மக்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தியும் கட்டியணைத்தும் அன்பைப் பரிமாறிக் கொண்ட காட்சி காண்போரை நெகிழ வைத்தது.வானில் இருந்து குண்டுகள் பொழிந்த யுத்த பூமியில் இருந்து உயிர்தப்பி வந்த … Read more

இம்ரான் கான் அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு- இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடக்க உள்ளது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ள இம்ரான்கான் தன் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வேன் என அறிவித்தார். மேலும் தன்னை பதவியில் இருந்து அகற்ற வெளிநாட்டு சதி உள்ளதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெறுவதை முன்னிட்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் … Read more

வேகமாக பரவும் கொரோனா புதிய திரிபு: விரைவில் ஊரடங்கு?

கொரோனா வைரஸால் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்ட உலக மக்களுக்கு, கொரோனா தடுப்பூசிகளால் தற்போது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதனிடையே, ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட புதிய கொரோனா திரிபுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ உலகம் முழுவதும் பரவி வரகிறது. இது அதிவேமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறியதாவது, “ஒமைக்ரான் … Read more

இந்தியாவுடனான முரண்பாடுகளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் – பாக். ராணுவத் தளபதி

இந்தியாவுடனான முரண்பாடுகளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் பாஜ்வா தெரிவித்துள்ளார். இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடிக்கும் நிலையில் அது பாகிஸ்தானுக்கு மிகவும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டாக இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் துப்பாக்கிச் சத்தம் ஏதுமில்லாமல் அமைதி நீடித்து வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை மூலமும் அரசாங்க உறவுகள் மூலமும் தீர்வு காண … Read more

பிரேசிலில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் பலி

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை எட்டு குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை தென்கிழக்கு மாகாணத்தின் அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களில் இப்பகுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. … Read more

அன்று சீனா… இன்று இந்தியா… – இலங்கை நெருக்கடியும் 'அரிசி' அரசியலும்!

இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க அந்த நாட்டுக்கு இந்தியா சார்பில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 40,000 டன் அரிசி அனுப்பப்படுகிறது. இதுகுறித்து மும்பையை சேர்ந்த பட்டாபி அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண ராவ் கூறும்போது, ‘முதல்கட்டமாக இந்தியாவில் இருந்து 40,000 டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் இலங்கையின் உணவுத் தட்டுப்பாடு குறையும். மேலும் … Read more

உக்ரைனில் மக்களை வெளியேற்ற கப்பல்களை அனுப்ப தயார் – துருக்கி

உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் நகரம் போரால் உருக்குலைந்த நிலையில், அங்கிருந்து குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற துருக்கி நாட்டு கப்பல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பொதுமக்கள் ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதால் அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவும் துருக்கி கடற்படையினர் தயாராக உள்ளதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சர் அகர் தெரிவித்துள்ளார். இதனிடையே கடல்வழிப் பாதையில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து அகற்றம் பணியில் துருக்கி கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். ருமேனியா கடற்படையினரும் கடல் பாதையில் ஆபத்தான கண்ணி வெடிகளைக் … Read more