அமெரிக்காவில் 2 இந்தியர்களுக்கு முக்கிய பதவி; ஜோ பைடன் பரிந்துரை

வாஷிங்டன்,  அமெரிக்காவில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் இந்தியர்கள் முக்கிய பதவிகளை அலங்கரிப்பது நீடிக்கிறது. இப்போது 2 முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். இந்திய வம்சாவளி வக்கீல் கல்பனா கோட்டக்கல், சம வேலை வாய்ப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட வினய் சிங், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையின் தலைமை நிதி அதிகாரி ஆகிறார். கல்பனா கோட்டக்கல் பன்முகத்தன்மை கொண்டவர், சட்ட நிபுணர் ஆவார். மனித உரிமைகளுக்காக ஓங்கிக்குரல் … Read more

வன்முறை பரவுவதை தடுக்க இலங்கையில்… 36 மணி நேர ஊரடங்கு!:அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு| Dinamalar

கொழும்பு:கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நம் அண்டை நாடான இலங்கையில் வன்முறை பரவுவதை தடுக்க, 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், அன்னிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக, அதன் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ மற்றும் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு மட்டுமல்லாமல், தினமும் 13 மணி நேரம் மின் வெட்டு இருப்பதும் பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முழக்கம் இதையடுத்து, … Read more

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வகை கொரோனாவை விட வேகமாக பரவும் புதிய வகை மாறுபட்ட வைரஸ் கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வகை கொரோனாவை விட வேகமாக பரவும் புதிய வகை மாறுபட்ட வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. எக்ஸ்.இ என்றழைக்கப்படும் புதிய வகை கொரோனா, ஒமைக்ரான் வைரசின் பி.ஏ.-1 மற்றும் பி.ஏ.-2  திரிபுகளில் இருந்து உருமாற்றம் அடைந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஒரு நோயாளி கொரோனா வைரசின் பல்வேறு வகைகளால் பாதிக்கப்படும்போது இது போன்ற பிறழ்வுகள் வெளிப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், புதிய வகை கொரோனா, ஒமைக்ரானின் பி.ஏ.-2வை விட 10 சதவீதம் … Read more

பிஏ 1, பிஏ 2 அடுத்து எக்ஸ்இ; தொடர்ந்து மிரட்டும் கொரோனா ரகங்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெனீவா: ஒமைக்ரான் வைரஸின் பிஏ 1, பிஏ 2 ஆகியவற்றை அடுத்து எக்ஸ்இ ரகம் தற்போது உலகை அச்சுறுத்த இருப்பதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் வடகிழக்கு மாகாணம் மற்றும் ஷாங்காய் ஆகிய பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பிஏ 2 ரக ஒமைக்ரான் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல அமெரிக்காவிலும் சில பகுதிகளிலும் இந்த உலகம் அதிவேகமாக பரவி வருகிறது. பிரிட்டனில் 49 லட்சம் பேருக்கு இதன் … Read more

பாகிஸ்தானின் நலனிற்காக மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் – பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானின் நலனிற்காக மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் இம்ரான் கான், தேசத்தின் நலனிற்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் மக்கள் போராட வேண்டும் என்றார். மேலும், வெளிநாட்டு சதிகாரர்கள் நாட்டின் தலைமையை மாற்றப் பார்க்கிறார்கள் என குற்றஞ்சாட்டிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் … Read more

பயங்கரவாத தடுப்புச் சட்டம் அன்று தமிழர்களை வதைக்க… இன்று மக்களை ஒடுக்க… – இலங்கை நிலவரம் பகிரும் தமிழர்

கொழும்பு: “அரசுக்கு எதிராக நியாயமான காரணங்களுக்குப் போராடும் மக்கள், எதிர்கட்சிகளின் குரல்வளையை நெறிப்பதற்காகவே இலங்கை அரசு தற்போது அவசர நிலையைக் கொண்டு வந்துள்ளது” என்று இலங்கைத் தமிழரும், அரசியல் ஆர்வலருமான ஒருவர் கள நிலவரத்தை விவரித்துள்ளார். இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட வந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த 11 கூட்டணிக் கட்சிகள் தங்கள் … Read more

இந்தியா உடனான பிரச்சினைகளுக்கு அமைதிப் பேச்சு மூலமே தீர்வு: பாகிஸ்தான் ராணுவ தளபதி

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரச்சினை உள்பட இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் நடைபெற்ற ‘இஸ்லாமாபாத் பாதுகாப்பு உரையாடல் 2022’- ல் இன்று பேசிய பாகிஸ்தான் ராவணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா கூறியது: “வளைகுடா பிராந்தியம் உள்ளிட்ட உலகின் மூன்றில் ஒரு பகுதிகளில் ஏதோ ஒரு பிரச்சினை அல்லது போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. … Read more

அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க இணையதளங்களை கண்காணிக்கும் இலங்கை அரசு

இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க இணையதளங்களையும் அந்நாட்டு அரசு கண்காணிக்கத் தொடங்கி உள்ளது. கடும் பொருளாதர நெருக்கடியை அடுத்து, அந்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. போரட்டத்தில் வன்முறை தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து, இலங்கை அரசு, போராட்டங்களை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் ஒரு அம்சமாக இணையதளங்களில் வாயிலாக மக்கள் ஒருங்கிணைப்போர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக திஸர அனுருத்த பண்டார என்னும் சமூக செயற்பாட்டாளரை … Read more

'எங்களுக்கும் வலி தெரியும்' – நெருக்கடியிலும் உக்ரைன் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் இலங்கை மக்களின் மனிதம்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் இலங்கைத் தீவில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு இலங்கைவாசிகள் உதவி வருகின்றனர். உக்ரைனைச் சேர்ந்த சுற்றுலா பயணி விக்டோரியா மகரென்கோ. இவர் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கிய நேரத்தில், தனது கணவர் மற்றும் ஐந்து வயது மகளுடன் சுற்றுலாவிற்காக இலங்கைக்கு வந்துள்ளார். தற்போது உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தாய்நாடு திரும்ப முடியாத நெருக்கடியில் இலங்கையில் சிக்கி இருக்கிறார். தங்களின் … Read more

கரோனா புதிய திரிபு எக்ஸ்இ; வேகமாக பரவும்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

லண்டன்: கரோனா புதிய திரிபான எக்ஸ்இ முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா கடந்த 2 ஆண்டுகளாக பல அலைகளைாக பரவியது. அண்மையில் கரோனா உருமாறிய ஒமைக்ரான் பரவலால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவிலும் கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடங்கி அச்சுறுத்தியது. இது கரோனா பரவல் 3-வது அலையாக தொடங்கியது. கடந்த சில … Read more