'புதிய பாகிஸ்தான் அல்ல நீங்கள் பிரதமராக இல்லாத பாகிஸ்தானே சிறப்பாக இருந்தது' – இம்ரானின் முன்னாள் மனைவி

‘நீங்கள் பிரதமராக இல்லாதபோது பாகிஸ்தான் சிறப்பாக இருந்தது’ எனக் கூறி இம்ரான் கானை கிண்டல் செய்துள்ளார் அவரது முன்னாள் மனைவி ரெஹ்மான் கான். கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார். இந்தச் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் … Read more

மக்கள் போராட்டத்தால் ஓட்டம்: கோத்தபய ராஜபக்சே ரகசிய இடத்தில் தங்கவைப்பு

இலங்கை அதிபர் இல்லம் அருகே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும்பதற்றம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் அதிபர் இல்லத்துக்குள் நுழையலாம் என்ற சூழல் உண்டானது. போலீசார் துணை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினாலும் போராட்டக்காரர்கள் முன்னேறி செல்ல முயன்றபடி இருந்தனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டு முன்பு ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். மக்கள் போராட்டம் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அவரது வீட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டு ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more

கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்

இலங்கை அதிபர் இல்லத்திற்கு முன்பாக கலவரம் கட்டுப்பாட்டுக்குள் – 54 பேர் வரை கைது – 35க்கும் மேற்பட்டோர் காயம் – போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் செயற்பட்டதாக அதிபர் குற்றச்சாட்டு. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர்  கொழும்பு நுகேகொடை மிரிஹான பகுதியில் அதிபரின் இல்லத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. போலீஸ், இராணுவம், சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக … Read more

இளம்பெண்ணின் பெண்ணின் காதில் இருந்து நண்டை லாவகமாக எடுக்கும் வீடியோ

இளம்பெண் ஒருவரின் காதில் புகுந்த நண்டை லாவகமாக வெளியே எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. கரிபீயன் தீவுகளில் ஒன்றான  Puerto Rico தீவில் இளம்பெண் ஒருவர் கடலில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவரது காதில் சிறிய நண்டு ஒன்று எதிர்பாராமல் புகுந்துள்ளது. இதனால் வலியில் அலறித் துடித்த அந்த பெண்ணின் நிலை கண்டு அருகில் இருந்த நபர் ஒருவர் இடுக்கி போன்ற சிறிய கருவி மூலம் காதில் புகுந்த … Read more

கோத்தபய எடுத்த முடிவுகளே பொருளாதார நெருக்கடிக்கு காரணம்: நிபுணர்கள் கருத்து

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை திடீரென்று ஏற்பட்டு விடவில்லை. 2019-ம் ஆண்டில் இருந்தே ஆட்சியாளர்களின் தவறான கொள்கை முடிவுகளால் இலங்கை பொருளாதாரம் சரிவை நோக்கி செல்ல தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பொது முடக்கம், பொருளாதார வீழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தி விட்டது. 2019-ம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த சில முக்கிய முடிவுகளே தற்போ தைய நிலைக்கு காரணம். நாட்டின் வரி விதிப்பு முறையில் கோத்தபய ராஜபக்சே மாற்றம் செய்தார். 15 சதவீத … Read more

ஷாங்காய் நகரில் அதிகரிக்கும் கொரோனா; கட்டுப்பாடுகள் தீவிரம்| Dinamalar

ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. சீனாவின் ஷாங்காய் நகரில் 26 லட்சம் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஒமைக்ரான் புதிய ரக வைரசால் தாக்கப்பட்டுள்ள இந்த நகரத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான ஊரடங்கு பின்பற்றப்படுவதால் கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது ஷாங்காய் சர்வதேச எக்ஸ்போ சென்டர் வளாகம் … Read more

சீனாவில் தொடர்ந்து கொரோனா…ஷாங்காயில் தீவிர ஊரடங்கு

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக நாடுகளுக்கும் பரவியது. உலக நாடுகள் கொரோனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறிய நிலையில், தீவிர ஊரடங்கு விதிகளால் சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது சீனாவுக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. சீனாவின் துறைமுக நகரான ஷாங்காயில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஷாங்காயின் தினசரி கொரோனா … Read more

இலங்கை அதிபர் இல்லம் முற்றுகை: கொழும்புவில் கண்காணிப்பு தீவிரம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை கண்டித்து அந்நாட்டு மக்கள் அதிபர் இல்லத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு போர்க்களம் போல் காட்சியளித்ததால், காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.  வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கிற நிலை உருவாகியுள்ளது. மேலும் மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் நாள் ஒன்றுக்கு … Read more

வில் ஸ்மித்தை கைது செய்ய போலீஸ் தயாராகவே இருந்தது: ஆஸ்கர் நிகழ்ச்சிக் குழு

லாஸ் ஏஞ்சல்ஸ்: மேடையில் கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்தை கைது செய்ய போலீஸார் தயாராகவே இருந்ததாக ஆஸ்கர் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை நடந்த ஆஸ்கர் விருது விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா ஸ்மித்தைப் பார்த்து, “ஜிஐஜேன் (அப்படத்தின் மைய கதாப்பாத்திரமான கதாநாயகி மொட்டை அடித்திருப்பார்) படத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா?” என்று நகைச்சுவை தொனியில் கேட்டார். இதனால் கோபம் அடைந்த வில் … Read more

கோத்தபயா வீட்டுக்கு வெளியே "அட்டாக்".. தீவிரவாதிகள் அட்டகாசம் இது.. அலறும் இலங்கை!

இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்ட ராஜபக்சே சகோதரர்கள் தற்போது மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் அதிபர் கோத்தபயா ராஜபக்சே வீட்டுக்கு வெளியே நேற்று இரவு பெரும் வன்முறைத் தாக்குதல் நடைபெற்றது. இதற்குத் தீவிரவாதிகள்தான் காரணம் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. உலகம் முழுக்க ஊர்ப்பட்ட கடன்களை வாங்கிக் குவித்து விட்ட ராஜபக்சே சகோதரர்கள் மக்களிடமிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். தங்களது கடன்களை அடைக்க இந்தியாவிடம் கடன் … Read more