2 பிரதமர்கள் சுட்டுக் கொலை.. ஒருவருக்கு தூக்கு.. பதற விடும் பாகிஸ்தான் அரசியல்!

பாகிஸ்தான் அரசியல் மீண்டும் ஒரு பரபரப்பான கட்டத்துக்குத் தாவியுள்ளது. பிரதமர் இம்ரான்கான் பதவி தப்புமா.. அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தான் அரசியல் எப்போதுமே அமைதியானதா இருந்தது இல்லை. பாகிஸ்தான் உருவாகி, முதல் பிரதமராக பதவியேற்ற லியாகத் அலிகான் தனது முழுப் பதவிக்காலத்தையும் முடிக்கவில்லை. அதற்குள்ளாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். முகம்மது அலி ஜின்னாவால் பிரதமராக நியமிக்கப்பட்டவர்தான் லியாகத் அலி கான். அவரது கதியே அதோ கதியாகத்தான் போனது. முதல் பிரதமரில் … Read more

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய இருவர் சுட்டு கொலை..

பாலஸ்தீன அகதிகள் முகாமில் சோதனையிட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய இருவர் சுட்டு கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் கடந்த வாரம் மட்டும் 3 வெவ்வேறு இடங்களில் போராளி குழுவினர் நிகழ்த்திய துப்பாக்கி சூடு சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களில் தொடர்புடையவர்களைத் தேடி பாலஸ்தீன கிராமங்களில் இஸ்ரேல் வீரர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாலஸ்தீன இளைஞர்கள் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர். ஜெனின் … Read more

மரியுபோல் நகரில் மக்களை வெளியேற்ற ரஷ்யா போர் நிறுத்தம் அறிவிப்பு

பொதுமக்கள் வெளியேறும் வகையில் உக்ரைனின் மரியுபோல் நகரில் இன்று போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் 36ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், துறைமுக நகரான மரியுபோலில் முக்கிய கட்டடங்கள் உள்ளிட்டவை சேதமாகி உள்ளன. இந்நிலையில், அந்நகரில் இருந்து ஜபோரிஜியாவுக்கு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகம் வழியாக மனிதாபிமான பாதையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜபோரிஜியா வரை நான்கு வழித்தடங்கள் செயல்படுத்துவது குறித்த உக்ரைனின் முன்மொழிவுகளுக்கு … Read more

'இது நமது ராணுவத்தில் ஒரு மைல்கல்' – ஸ்பை சாட்டிலைட் சோதனை செய்த தென் கொரியா 

சீயோல்: வழக்கமாகவே வட கொரியாவின் ஏவுகணை செய்திகளே வந்த வண்ணம் இருக்கும். ஆனால், இந்த முறை தென் கொரிய வெற்றிகரமாக திட எரிபொருளில் இயங்கும் ராக்கெட்டில் ஸ்பை சாட்டிலைட்டை ஏவி சோதனை செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளி கண்காணிப்பில் தென் கொரியா முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்தச் சோதனை தென் கொரிய ராணுவ அமைச்சர் சூ வூக் முன்னிலையில் தலைநகர் சீயோலில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டேன் என் எனும் … Read more

போனை எடுங்க.. புடினுடன் பேசுங்க.. போரை நிறுத்துங்க.. மோடிக்கு உக்ரைன் கோரிக்கை

இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ரஷ்யாவை வலியுறுத்தி இந்தப் போரை கைவிடச் செய்ய வேண்டும் என்று உக்ரைன் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி , இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வர வேண்டும் என்றும் உக்ரைன் கோரியுள்ளது. இதுதொடர்பாக என்டிடிவி நிறுவனத்துக்கு உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்கு அறிவுரை கூற வேண்டும். இந்தப் போரை நிறுத்த வேண்டும். போர் தொடங்கி 2 … Read more

“வன விலங்குகளுக்கும் சுதந்திரமாக நடமாட சட்ட உரிமை உள்ளது”-ஈக்குவடார் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வன விலங்குகளுக்கும் மனிதர்களை போல சுதந்திரமாக நடமாட எல்லா சட்ட உரிமைகளும் உள்ளதாக ஈக்குவடார் நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாத குட்டியாக இருந்த குரங்கு ஒன்றுக்கு எஸ்ட்ரெலிட்டா என பெயர் சூட்டி ஆனா பியட்ரிஸ் என்ற பெண் செல்ல பிராணியாக வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் வனவிலங்குகளை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோதம் என கூறி அதிகாரிகள் குரங்கை விலங்குகள் பூங்காவிற்கு மாற்றினர். பூங்காவில் இருந்த அந்த குரங்கு … Read more

சீன விமான விபத்து: 30 நாட்களில் அறிக்கை தாக்கல்

பீஜிங்: சீன விமான விபத்து குறித்து 30 நாட்களில் அறிக்கை செய்யப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வூஸுநகருக்கு கடந்த 21-ம் தேதி மதியம் புறப்பட்ட நிலையில், குவாங்சூ மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிக்கு மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 123 பயணிகள், … Read more

நெதர்லாந்தில் மெக்டொனால்டு உணவகத்திற்குள் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு.. 2 பேர் உயிரிழப்பு

நெதர்லாந்தின் ஸ்வோல் (Zwolle) நகரில் உள்ள மெக்டொனால்டு உணவகத்திற்குள் மர்ம நபர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். வாடிக்கையாளர் போன்று உணவகத்திற்குள் நுழைந்த அந்த மர்ம நபர், உணவை ஆர்டர் செய்துவிட்டு மேஜையில் அமர்ந்திருந்துள்ளான். பின்னர், எதிரே உணவருந்திக் கொண்டிருந்த இருவரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதில், படுகாயமடைந்த இருவரும் உணவகத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தனர். இச்சம்பவம் உணவகத்தில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் மத்தியில் பீதியை … Read more

உக்ரைன் போர் உத்திகள் | ராணுவ ஜெனரல்கள் மீது அதிருப்தியில் ரஷ்ய அதிபர்: அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 5-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், போர் உத்தியில் அதிபர் புதினை ரஷ்யப் படைகள் தவறாக வழிநடத்தியிருப்பதாகவும், அதனால் புதின் கடுமையான கோபத்தில் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், “புதின் தனது ராணுவ ஜெனரல்கள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளார். போர்க்களத் தகவல்களில் உண்மைக்கு மாறான நிலவரங்களை தன்னிடம் அவர்கள் தெரிவித்ததாக புதின் ஆத்திரத்தில் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், துருக்கி தலைநகர் … Read more

"இது தப்பு.. சரியில்லை".. இந்தியா – ரஷ்யா பேச்சு குறித்து.. அமெரிக்கா அதிருப்தி!

ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவது சரியல்ல. பெரும் ஏமாற்றமளிக்கிறது என்று அமெரிக்கா வர்ணித்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே ரஷ்யாவுக்கு எதிராக செயல்படுமாறு இந்தியாவை, அமெரிக்கா வற்புறுத்தி வருவது நினைவிருக்கலாம். அமெரிக்காவுடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவும் இந்தியாவை விமர்சித்துள்ளது. ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா செயல்படுவது , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவும், இது உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலை நியாயப்படுத்துவது போலாகி விடும் என்றும் இந்தியாவை இந்த … Read more