பயத்தால் புதினிடம் தவறான தகவல்களை சொல்லும் ஆலோசகர்கள்: அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷிய படையால் கைப்பற்ற முடியவில்லை. உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சவால் அளித்து வருவதால் ரஷிய ராணுவத்தால் முன்னேற முடியவில்லை. உக்ரைனில் ரஷிய படைகள் பின்னடைவை சந்தித்து வருவதாக அமெரிக்கா, இங்கிலாந்து தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் அவரது நாட்டு ராணுவத்தாரால் தவறாக வழிநடத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை … Read more

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தொற்று பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தொற்று பரிசோதனை செய்து கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.  அந்நகரம் ஹுவாங்பூ ஆற்றை மையமாக கொண்டு கிழக்குப்பகுதி, மேற்குப்பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவங்கள் அதிகமுள்ள புடோங் உட்பட கிழக்கு பகுதி முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேற்குப்பகுதியில் சில இடங்களில் அறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்கூட்டியே சில பகுதிகளில் … Read more

பொதுமக்கள் வெளியேறுவதற்காக மரியுபோல் நகரில் இன்று போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு

உக்ரைன் நாட்டை கடும் சேதத்துக்குள்ளாக்கி இருக்கும் ரஷியா தொடுத்துள்ள போர் இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. ரஷிய படைகளின் தொடர் தாக்குதலால் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. அங்கு 90 சதவீதத்துக்கும் மேல் கட்டிடங்கள் இடிந்தன. 4 லட்சம் பேர் வசித்த அந்நகரில் இருந்த மக்கள் வெளியேறியுள்ள நிலையில் இன்னும் 1.60 லட்சம் பேர் சிக்கி உள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற … Read more

இந்தியாவிற்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்; பீப்பாய்க்கு $35 தள்ளுபடி வழங்கும் ரஷ்யா!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் முடிவேதும் இல்லாமல் தொடரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை. போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விலையில் பீப்பாய் ஒன்றுக்கு  $35  என்ற அளவிற்கு கணிசமான தள்ளுபடியில் வழங்கியுள்ளது என்று … Read more

"வீட்டுக்குப் போனா பொண்டாட்டி திட்டுவா சார்".. 14 வருஷமாக ஏர்போர்ட்டிலேயே வசிக்கும் நபர்!

மனைவிக்குப் பயந்து ஒரு மனிதர் விமான நிலையத்திலேயே கடந்த 14 வருடமாக வசித்து வருகிறார். நம்ப முடியவில்லை இல்லையா.. ஆனால் அதுதான் நிசம்.. நீங்க நம்பித்தான் ஆகணும். இந்த நபர் வசிப்பது சீனாவின் பெய்ஜிங் நகரில். இவரது பெயர் வெய் ஜியாங்குவா . இவருக்கு தற்போது 60 வயது நெருங்குகிறது. கடந்த 15 வருடமாக அதாவது 2008ம் ஆண்டிலிருந்து இந்த நபர் பெய்ஜசிங் சர்வதேச விமான நிலையத்தின் 2வது டெர்மினல் பகுதியில் வசித்து வருகிறார். வீட்டுக்கே போகவில்லையாம். … Read more

அரசுக்கு எதிராக வெளிநாட்டுச் சதி – இம்ரான் கான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தமது அரசுக்கு எதிராக வெளிநாட்டுச் சதி உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அதற்கான சான்றுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், 342 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியின் பலம் 164ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் அதிருப்தி வேட்பாளர்கள் உட்பட எதிர்க்கட்சியின் பலம் 177ஆக அதிகரித்துள்ளது. தனது அரசைக் கவிழ்க்க வெளிநாட்டுச் சதி உள்ளதாகக் கூறிய பிரதமர் இம்ரான்கான் அது குறித்த சான்றுகளை ராணுவம், உளவுத்துறைத் … Read more

குண்டுமழை பொழியும் ரஷ்யா.. உக்ரைன் குற்றச்சாட்டு.!

உக்ரைனில் படைகளைப் பின்வாங்கிக் கொள்வதாக ரஷ்யா அறிவித்த பகுதிகளிலும், மற்ற பகுதிகளிலும் ரஷ்ய ராணுவம் போர் விமானங்கள் மூலம் குண்டுமழை பொழிந்து வருவதாகவும், தாக்குதலை அதிகரித்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் ஒரு மாதக் காலத்துக்கு மேல் நீடிக்கிறது. இரு நாட்டுக் குழுவினரின் பேச்சுவார்த்தைக்குப் பின் நல்லெண்ண நடவடிக்கையாகக் கீவ், செர்னிகிவ் ஆகிய நகரங்களில் இருந்து ரஷ்ய ராணுவத்தினரைப் பின்வாங்கிக் கொள்வதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. அது ரஷ்யாவுடனான போரில் திருப்புமுனை … Read more

’இம்ரான் கானை படுகொலை செய்ய சதி’ – ஆட்சி தள்ளாடும் வேளையில் கட்சியின் மூத்த தலைவர் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் ஃபைசல் வாவ்டா தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் ஆளும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்பதே இம்ரான் கான் மீதான பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் மூத்த தலைவரான ஃபைசல், பிரதமர் இம்ரான் … Read more

மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன்தான்… 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு உயிருடன் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன்தான் என்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். உள்துறை அமைச்சரான ஷேக் ரஷீத், கசாப் பற்றிய ரகசிய தகவல்களை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அஜ்மல் கசாப் பாகிஸ்தானின் ஃபரித்கோட் பகுதியைச் சேர்ந்தவன் என்று நவாஸ் ஷெரீப் கசாப் பற்றிய விவரங்களை இந்தியாவுக்கு அனுப்பியதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார். … Read more

Viral News: ஆஸ்திரேலியாவின் சன்ஷைன் கடற்கரையில் ‘வேற்றுகிரக’ உயிரினம்…!!

ஆஸ்திரேலியாவில், கடற்கரையில் ஒருவர் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தை கண்டுள்ளார். 4 கால்கள் கொண்ட இந்த உயிரினம் அடையாளம் காணப்படவில்லை. சமூக வலைதளங்களில் வெளியான அதன் படங்களைப் பார்த்து சிலர் ஏலியன் என்று கூறி வருகின்றனர். இந்த விசித்திரமான  உயிரினத்தை கடற்கரையில் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதை முதன்முறையாக பார்த்தவர் வீடியோ செய்து ஷேர் செய்துள்ளார். ஏலியன் போன்ற தோற்றம் இந்த உயிரினத்தின் தோற்றம் வேற்றுகிரகவாசி போல் இருந்தது. எனவே, அதனை வேற்றுகிரகவாசி என்றும் அந்த நபர் … Read more