மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: பலி 20| Dinamalar

மெக்சிகோ சிட்டி:மெக்சிகோவில் ரகசியமாக சேவல் சண்டை நடந்த இடத்தில் ஒரு தரப்பினர் மீது மற்றொரு பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட 20 பேர் பலியாகினர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மைக்கோகன் மாகாண சுற்றுப் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குழுவினர் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடப்பது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தரப்பினர் ரகசியமாக சேவல் சண்டை நடத்தி உள்ளனர். அப்போது … Read more

பங்கு வர்த்தகத்தில் மோசடி 7 இந்தியர்கள் மீது வழக்கு| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு சட்டவிரோதமாக, 7.62 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக, இந்தியாவை பூர்வீகமாக உடைய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஹரி பிரசாத் சூர், லோகோஷ் லாகுடு, சோட்டு பிரபு தேஜ் புலகம் பணியாற்றி வருகின்றனர். நண்பர்களான இவர்களுக்கு, தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் தெரிய வந்தன. கொரோனா … Read more

கேரள மாணவிக்கு லண்டனில் கத்திக்குத்து| Dinamalar

லண்டன்:கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சோனா பிஜூ. இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கிழக்கு லண்டன் பல்கலையில் படிக்கிறார். இங்கு, ஈஸ்ட் ஹாம் என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பகுதி நேர வேலையும் பார்க்கிறார். கடந்த 25ம் தேதி மதியம், சோனா பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த இந்தியாவை சேர்ந்த ஸ்ரீராம் அம்பார்லா, 23, சோனாவுடன் வாக்குவாதம் செய்தார். திடீரென, சோனாவை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். தகவல் அறிந்து வந்த போலீஸ் சோனாவை மீட்டு … Read more

இங்கிலாந்தில் கேரள மாணவியை கத்தியால் குத்திய இந்திய வாலிபர்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டனில் ஈஸ்ட் ஹேம் பகுதியில் ஐதராபாத் வாலா பிரியாணி கடை ஒன்று உள்ளது.  இதில் சோனா பிஜு (வயது 20) பணியாற்றி வந்துள்ளார்.  கேரளாவை சேர்ந்த சோனா இங்கிலாந்தில் உள்ள பல்கலை கழகத்தில் படித்து வருபவர். அவர் படித்து கொண்டே பகுதிநேர ஊழியராகவும் உணவு விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில், ஸ்ரீராம் அம்பர்லா (வயது 23) என்ற இந்தியர் அந்த கடைக்கு சென்றுள்ளார்.  அவருக்கு வேண்டிய உணவு வகைகளை கொண்டு வரும் … Read more

இஸ்ரேலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் இன்று மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  இதையும் படியுங்கள்…இந்தியாவுக்கான பயண கட்டுப்பாடு மேலும் நீக்கம்- அமெரிக்கா அறிவிப்பு

மருந்துகள் இல்லாததால் இலங்கையில் அறுவை சிகிச்சை ரத்து – உடனடியாக உதவிக்கரம் நீட்டிய இந்தியா…!

கொழும்பு, இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி … Read more

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – பிரசில்சில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு

30.3.2022 12.20: பிரசல்சில் ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற உள்ள நேட்டோ (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  ஜார்ஜியா, பின்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு ஆகிய நாடுகளும் அழைக்கப்பட்டுள்ளது என கிவ் இன்டிபென்டன்ட் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இந்திய வம்சாவளிக்கு மரண தண்டனை உறுதி| Dinamalar

சிங்கப்பூர்:மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த இந்திய வம்சாவளியின் மனுவை, சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவை சேர்ந்தவர் நாகேந்திரன் தர்மலிங்கம், 34. இந்திய வம்சாவளியான இவர், 13 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூருக்கு போதை மருந்து கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டன. சிங்கப்பூர் அதிபருக்கு அனுப்பிய … Read more

கீவ் அருகே படைகளை குறைக்க ரஷியா சம்மதம்: புதின் – ஜெலன்ஸ்கி விரைவில் சந்திக்க வாய்ப்பு

கீவ், உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.  பெலாரஸ் நாட்டில் உக்ரைன் – ரஷியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் தலைமையில் இந்த … Read more

"நான் அதிபராக இருந்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது" – ரணில் விக்கிரமசிங்கே

கொழும்பு, இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம், கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்கு உள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது.  மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திகைத்து திண்டாடி வருகின்றனர்.  எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலக்கரி வாங்குவதற்கு கூட நிதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது. தினசரி பல … Read more