'தேச துரோகிகள், தேசத்தின் மீதான கறை..' – போராட்டக்காரர்களை கடுமையாக விமர்சித்த ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ: உக்ரைன் மீதான நமது ராணுவ நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், போராடுபவர்கள் தேச துரோகிகள், தேசத்தின் மீதான கறை. அவர்களை வாயில் நுழைந்த பூச்சியை துப்புவது போல் உண்மையான ரஷ்யர்கள் துப்பிவிடுவார்கள். சமூகம் அதன் பின்னர் மேம்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசினார். உக்ரைன் மீது கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். அதன்பின்னர் 23வது நாளாக இன்றும் தாக்குதல் நடைபெறுகிறது. உலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய … Read more

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவினால் அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.. சீன அதிபருக்கு ஜோபைடன் எச்சரிக்கை.!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவினால் அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமாக இருக்குமென சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. உக்ரைன் ரஷ்யா விவகாரம் குறித்து அமெரிக்கா அதிபர் பைடன் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஏறத்தாழ 2 மணி நேரம் தொலைபேசியில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  ரஷ்யாவின் படையெடுக்குப்பு மேற்கு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சீனா அமைதி காத்து வருவதாகவும், … Read more

'ரஷ்யாவை ஆதரித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்' – சீனாவை எச்சரித்த அமெரிக்க அதிபர் பைடன்

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என சீனாவை எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைன் மீது ரஷ்யா 23வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. சீனாவிடம் ரஷ்யா ராணுவ, பொருளாதார உதவிகள் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக சந்தித்துப் பேசினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்ததாகத் தெரிகிறது. சந்திப்பின்போது, … Read more

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு தொடர்பாக அமெரிக்கா அதிருப்தி.!

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு தொடர்பாக அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, இந்தியத் தலைவர்களுடன் தாங்கள் பல்வேறு மட்டங்களில் தொடர்பில் இருப்பதாகக் குறிப்பிட்டார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு வரலாற்றின் தவறான பக்கத்தில் வைக்கும் என்று அவர் தெரிவித்தார். உக்ரைனை ரஷ்யா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகக் குறிப்பிட்ட சாகி, இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளதா என உலகம் உற்று நோக்குவதாகவும் தெரிவித்தார். … Read more

போர் இழப்புகளில் இருந்து மீண்டு வர ரஷியா பல தலைமுறைகள் எடுக்கும்- உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் சமரசம் ஏற்படாத நிலையில் ரஷியா 24-வது நாட்களாக தனது தாக்குதலை தொடர்ந்துள்ளது. இருந்தாலும் முக்கியமான நகரங்களை பிடிக்க முடியாமல் திணறி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவிகளை பெற்று உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் ரஷியாவுக்கு இழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, பொருளாதாரத்தடைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், போரினால் ஏற்படும் இழப்பு ரஷியாவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சீனாவிடம் … Read more

உக்ரைன் – ரஷ்யா போரினால் 4 கோடி மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் – உலகளாவிய மேம்பாட்டு மையம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உணவு மற்றும் எரிசக்திக்கான விலை உயர்வு மூலம் 4 கோடிக்கும் அதிகமான மக்களை தீவிர வறுமையில் தள்ளும் என்று உலகளாவிய மேம்பாட்டு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில்,கடந்த 2007 மற்றும் 2010ம் ஆண்டுகளில் ஏற்பட்ட விலை ஏற்றத்தை விட அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதி உலக கோதுமை ஏற்றுமதியில் கால் பங்கிற்கும் அதிகம் என்றும், இதனை இறக்குமதி செய்யும் நாடுகள் மாற்றுப் பொருட்களுக்கு … Read more

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களுக்கு தடை: தலிபான்கள் உத்தரவு

காபூல் : ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், தங்களின் முந்தைய ஆட்சியில் இருந்ததைபோல கடுமையாக நடந்து கொள்ள மாட்டோம் என்றும், தற்போதைய அரசு அனைவருக்குமான நவீன அரசாக இருக்கும் எனவும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர் மாறாக அவர்கள் நாட்டில் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்ப தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இது குறித்து தலிபான்கள் அரசின் மூத்த அதிகாரி … Read more

உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்துக்கு முதலிடம்| Dinamalar

ஹெல்சின்கி:உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், தொடர்ந்து ஐந்தாவது முறையாக பின்லாந்து முதலிடம் வகிக்கிறது. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐ.நா., ஆதரவு பெற்ற அமைப்பு ஒன்று ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.மக்களை நேரடியாக சந்திப்பதன் வாயிலாகவும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விபரங்கள் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்பட்டு இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது. ரஷ்ய – உக்ரைன் போருக்கு முன்னதாக எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தற்போதைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. … Read more

குண்டு மழை பொழிந்து வருவதால் கீவ் நகரின் மெட்ரோ சுரங்கங்களில் குழந்தைகள், பெண்கள் தஞ்சம்.!

உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யப் போர் விமானங்கள் வட்டமிட்டு குண்டு மழை பொழிந்து வருவதால் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் சுரங்கங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். போர் 24 வது நாளை எட்டிய நிலையில் இரவு நேரங்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டத்தால் சுரங்கங்களின் உள்ளே வாழும் மக்களின் வாழ்க்கை பரிதாபகரமாக மாறி வருகிறது. பொழுதுபோக வழியில்லாமலும் உணவு குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாமலும் சுகாதார குறைபாடுகளும் இங்குள்ள மக்களை வருத்தி வாட்டுகின்றன. குளிப்பதற்கும் … Read more