ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 19 புதிய யூத குடியிருப்புகள் – இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

டெல் அவிவ், காசா முனை மற்றும் மேற்கு கரை என இரு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. தொடர்ந்து மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டிகள் எழுந்து வரும் நிலையில், எதிர்ப்புகளை மீறி மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகளை அமைத்து வருகிறது. இந்த நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 19 புதிய யூத குடியிருப்புகளை அமைப்பதற்கான திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு … Read more

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா அதிரடி தாக்குதல்

டமாஸ்கஸ், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க அந்நாடு அரசுப்படையுடன், அமெரிக்க படைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, சிரியாவின் பெல்யரா நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க … Read more

உக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதல்: 8 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 395வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. … Read more

வங்கதேசத்தில் நாடாளுமன்றம் முற்றுகை: பதற்றம் அதிகரிப்பு

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி (வயது 32) மீது கடந்த 12-ந்தேதி மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவரது தலையில் குண்டு பாய்ந்தது.ஷெரீப் உஸ்மானின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் வங்காளதேசத்தில் நேற்று முன்தினம் … Read more

இம்ரான்கானுக்கு அதிர்ச்சி: மேலும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

இஸ்லமபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தெஹ்ரிக் -இ -இன்சாப் என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பிரதமராக பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர மேலும் பல வழக்குகள் இம்ரான் கான் மீது தொடுக்கப்பட்டன. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.07 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.39 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 72.28 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ of … Read more

உலகப்போர்… ரத்த வெள்ளம்… நாஸ்ட்ராடாமஸின் 2026 கணிப்புகள் என்னென்ன?

Nostradamus 2026 Prediction: 2026ஆம் ஆண்டில் உலகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அச்சுறுத்தல்கள் குறித்தும் நாஸ்ட்ராடாமஸ் சில கணிப்புகளை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை இங்கு காணலாம்.

அணு ஆயுதங்கள் வைத்திருக்க மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் இல்லை – ஜப்பான் திட்டவட்டம்

டோக்கியோ, ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி அணு ஆயுதங்களை வாங்க ஜப்பான் அரசு முன்வர வேண்டும் என மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பரிந்துரை செய்தார். ஆனால் அந்த பரிந்துரையை ஏற்க ஜப்பான் பிரதமர் சனா தகைச்சி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களை ஒருபோதும் வைத்திருக்க மாட்டோம் என கடந்த பல தசாப்தங்களாக ஜப்பான் அரசு கொண்டிருக்கும் நிலைப்பாடு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜப்பானை பொறுத்தவரை சீனா, … Read more

உக்ரைனுக்கு 90 பில்லியன் யூரோ நிதியுதவி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

பிரசல்ஸ், ரஷியா உடனான போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலதன சந்தையில் இருந்து 90 பில்லியன் யூரோ நிதி திரட்டி, அடுத்த 2 ஆண்டுகளில் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லெயன் தெரிவித்துள்ளார். அதே சமயம் ரஷியா போர் இழப்பீடுகளை தரும் … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை, வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

துபாய், மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஐக்கிய அரசு அமீரகம். இந்நாட்டின் துபாய், அபுதாபியில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. கனமழை காரணமாக துபாய், அபுதாபியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று காலை வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அதேபோல், கனமழையால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். 1 More update தினத்தந்தி Related Tags : United Arab Emirates  … Read more