ரஷியாவிற்கு மறைமுகமாக நிதி உதவி: இந்தியா மீது டிரம்ப் ஆலோசகர் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்ப் பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய வரி வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்தால், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்ப் பொருட்கள் கொள்முதலை இந்தியா … Read more

“வரிகளை கணிசமாக உயர்த்துவேன்” – இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வங்கும் இந்தியா மீது வரிகளை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் “இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கிறது. ரஷ்ய போர் இயந்திரத்தால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக … Read more

'இன்னும் வரியை உயர்த்துவேன்' இந்தியாவுக்கு ஷாக் கொடுக்கும் டிரம்ப் – இப்போ என்ன காரணம்?

Donald Trump: இந்தியா மீதான வரியை இன்னும் கணிசகமாக உயர்த்துவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது சர்வதேச அரங்கில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கைத் தேவை: ரஷ்யா வலியுறுத்தல்

மாஸ்கோ: அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை என்று கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை, அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கு இடையேயான போராக மாறக்கூடும் என ரஷ்ய முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வதேவ் கூறியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இரண்டு (அணு ஆயுத) நீர்மூழ்கிக் கப்பல்களை பொருத்தமான பகுதிகளுக்கு நகர்த்த தான் உத்தரவிட்டிருப்பதாக கடந்த 1-ம் தேதி தெரிவித்தார். … Read more

‘அசைவ பால்’ விவகாரமும், இந்தியா – அமெரிக்கா முரண்பாடுகளும்: ஒரு தெளிவுப் பார்வை

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதில் இழுபறியாக அமைந்த அம்சங்களில் ஒன்றுதான் ‘அசைவ பால்’ சர்ச்சை. இது குறித்து இன்னும் தெளிவாகப் பார்ப்போம். உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்​ரலில் வெளி​யிட்​டார். அது ஏற்படுத்திய அதிர்வலைகளைத் தொடர்ந்து வரி விகிதத்தை குறைப்பது தொடர்​பாக பல்​வேறு நாடுகளும், அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்​தையை தொடங்கின. இந்தியாவும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வரும் 7-ம் … Read more

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா நிதியுதவி செய்கிறது: அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்வதாக குற்றம் சாட்டினார். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவரான ஸ்டீபன் மில்லர், “இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் உடனான போருக்கு இந்தியா தொடர்ந்து நிதியுதவி செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று … Read more

வங்க மொழியை வங்கதேச மொழி என்பதா? – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: வங்க மொழியை வங்கதேத்தின் மொழி என்று டெல்லி காவல்துறை குறிப்பிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தகுந்த பதிலடி கொடுப்பார் என்றும் கூறியுள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ட்வீட்டை மேற்கோள் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கப் பதிவில், “ஒன்றிய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் டெல்லி காவல்துறையானது வங்காள மொழியினை ‘வங்கதேச மொழி’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. இது நம் தேசிய கீதம் இயற்றப்பட்ட வங்க … Read more

'இந்தியா-பாகிஸ்தான் போரை தலையிட்டு தீர்த்து வைத்தேன்' – டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்

நியூயார்க், காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கு இடையே போர் உக்கிரமான நிலையை எட்ட இருந்த நிலையில், திடீரென இரு நாடுகளும் பரஸ்பரம் போர் நிறுத்தத்தை மேற்கொண்டன. இந்த நிலையில் தான் முன்னின்று தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி கேட்டுக்கொண்டதால் தான் இரு நாடுகளும் போர் … Read more

'அந்த முகமும், அந்த உதடுகளும்…' வெள்ளை மாளிகை ஊடக செயலாளரை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறை அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளராக 27 வயது இளம்பெண் கரோலின் லெவிட்டை நியமனம் செய்வதாக கடந்த நவம்பர் 15-ந்தேதி அறிவித்தார். இதன் மூலம் இளம் வயதில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளராக பதவியேற்ற பெண் என்ற பெருமையை கரோலின் லெவிட் பெற்றார். வெள்ளை மாளிகையில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பு மூலமாக அமெரிக்க அரசின் செயல்திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து விளக்கி வரும் … Read more

200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூர்: காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார். சிங்கப்பூரில் தேசிய நூலக வாரிய கட்டிடத்தில் உள்ள டிராமா சென்டரில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில், ‘சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார். 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான இது, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த … Read more