World Consumer Day | உலக நுகர்வோர் தினம்

நுகர்வோர் பாதுகாப்பு, உரிமைகளை பெற்றிடவும், விழப்புணர்வு ஏற்படுத்தவும் 1983 முதல் மார்ச் 15ல் உலக நுகர்வோர் உரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960ல் உருவாக்கப்பட்டது. இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 1962ல் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார். ‘நுகர்வோருக்கு நியாயமான, பொறுப்பான ஏ.ஐ.,’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. நுகர்வோர் உரிமைகள் என்பது வாங்கும் பொருளின் தரம், விலை, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்வது. நுகர்வோர் … Read more

ஹமாஸ் மீதான போரின் எதிரொலி! இரும்புக் கரம் கொண்டு அடக்க பட்ஜெட்டை அதிகரித்த இஸ்ரேல்!

Israel Hamas War : காசாவில் ஹமாஸுக்கு எதிரான போரில், எதிரியை இரும்புக்கரம் கொண்டு அடக்க முடிவு செய்த இஸ்ரேல் போர்க்கால பட்ஜெட்டைத் அதிகரித்துள்ளது. 

Imran warns of Sri Lanka-like crisis in Pakistan amid high inflation | இலங்கையில் நடந்தது பாகிஸ்தானிலும் நடக்கும்: இம்ரான்கான் கணிப்பு

ராவல்பிண்டி: ‛‛பணவீக்கத்தின் புதிய அலை தோன்றியதும் நாட்டில், மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் நிலை ஏற்படும்; இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்கும்” என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) தலைவருமான இம்ரான் கானின் ஆதரவு பெற்றவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு கணிசமான உறுப்பினர்கள் உள்ளனர். இதனையடுத்து நவாஸ் ஷெரீப் கட்சியும், பூட்டோவின் கட்சியும் கூட்டணி அமைத்து … Read more

போரை தீவிரப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு; இஸ்ரேல் அதிரடி

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் … Read more

மூன்றாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர்

காத்மாண்டு, நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள … Read more

உக்ரைன் போரில் அதிர்ச்சி: ஒரே நாளில் 234 வீரர்களை கொன்று குவித்த ரஷிய ராணுவம்

மாஸ்கோ, உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி 3 ஆண்டுகளாக நீடித்து வரும்நிலையில் போர் தீவிரத்தை ரஷியா கடைப்பிடித்து வருகிறது. அதன்படி ரஷியா உடனான எல்லைகளில் முகாம்கள் அமைத்துள்ள உக்ரைன் வீரர்கள் மீது ரஷிய ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது. ரஷியாவின் குர்ஸ்க் மற்றும் பெல்கோரோட் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில் ராணுவ டாங்கிகள், கவச வாகனங்கள், நவீன பீரங்கிகள் உள்ளிட்டவற்றை ரஷிய ராணுவம் பயன்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட இந்த ரகசிய நடவடிக்கையில் உக்ரைன் ராணுவத்தினர், … Read more

சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமாக ஆன்லைன் மார்க்கெட்டிங்.. இலங்கையில் 21 இந்தியர்கள் கைது

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வரும் மக்கள் சம்பளம் பெற்றோ அல்லது சம்பளம் பெறாமலோ வேலை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிதிகளை மீறி, சுற்றுலா விசாவில் வந்து வேலை செய்த 21 இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வயது 24 முதல் 25 வயது வரை இருக்கும். கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ஆன்லைன் மார்க்கெட்டிங் சென்டர் நடத்தியதாகவும், கம்ப்யூட்டர்கள் … Read more

பிரேசிலில் துப்பாக்கி முனையில் பேருந்தை கடத்திய நபர் – 17 பேர் பத்திரமாக மீட்பு, இருவர் படுகாயம்

ரியோ டி ஜேனரோ, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜேனரோ நகரில் உள்ள நோவோ ரியோ பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரேசிலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனர். அங்கிருந்து மினாஸ் ஜெரைஸ் நகருக்கு செல்வதற்காக பேருந்து ஒன்று புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது கையில் துப்பாக்கியுடன் ஒரு நபர் பேருந்தில் ஏறியுள்ளார். மேலும் பேருந்தில் இருந்த பயணிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார். அந்த பேருந்தில் … Read more

Biden – Trump clash again in the US presidential election | அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் — டிரம்ப் மீண்டும் மோதல்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு நவம்பரில் நடக்க உள்ளது. அதற்கு முன், கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். மற்ற வேட்பாளர்கள் வெளியேறிய நிலையில், இருவரும் வரும் தேர்தலில் அதிபர் வேட்பாளராக தேர்வாவது உறுதியாகி உள்ளது. ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராவதற்கு, 1,968 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை … Read more

‘மோடிதான் மீண்டும் பிரதமர்’ – அமெரிக்க எம்.பி. நம்பிக்கை

புதுடெல்லி: இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதியும், மக்கள் பிரதிநிதிகள் அவையின் உறுப்பினருமான ரிச்சர்ட் டீன் மெக்கார்மிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்திலிருந்து மக்கள் பிரதிநிதிகள் அவைக்கு எம்.பி.யாக கடந்த 2023-ல்தேர்வு செய்யப்பட்டவர் ரிச்சர்ட் மெக்கார்மிக். குடியரசுக் கட்சியின் மூத்த தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் தேர்வுசெய்யப்படுவார் என்று நேற்று ரிச்சர்ட் மெக்கார்மிக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: … Read more