Plot to kill terrorist: Indian arrested in New York | பயங்கரவாதியை கொல்ல சதி: நியூயார்க்கில் இந்தியர் கைதானதாக தகவல்

புதுடில்லி : அமெரிக்க சீக்கிய பயங்கரவாதியை கொல்ல முயற்சித்ததாக இந்தியரை நியூயார்க் நகர போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில், சீக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுவை, கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. இந்த விவகாரத்திலும் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழலாம் என, எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நியூயார்க் நகர போலீசார் நிகி்ல் குப்தா என்ற இந்தியரை கைது செய்துள்ளதாகவும், இவர் தான் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் … Read more

8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் கடலில் விழுந்தது

டோக்கியோ: அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே விமானம், ஜப்பானின் தென்பகுதியில் யாகுஷிமா தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலோர காவல் படையினர் சம்பவ இடத்தில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகுகள் மூலம், அப்பகுதியில் தேடியபோது ஒருவர் மட்டும் மீட்கப்பட்டுள்ளார். விமானத்தின் உடைந்த பாகங்களும் கண்டறியப்பட்டன. அவை விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. … Read more

US plans to renew H1B visas | எச்1பி விசாவை புதுப்பிக்க அமெரிக்கா புது திட்டம்

வாஷிங்டன் :விசாக்களை புதுப்பிக்க புதிய நடைமுறையை, அமெரிக்க அரசு டிசம்பரில் அறிமுகம் செய்ய உள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, எச்1பி உள்ளிட்ட விசாக்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா முன்னிலையில் உள்ளது. விசா நடைமுறைகளில் உள்ள குழப்பம் மற்றும் அதிகமானோர் விண்ணப்பிப்பதால், விசா கிடைக்காமல் நீண்ட காலம் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றபோது, இந்தப் பிரச்னையை, … Read more

US Embassy Issues Record-Breaking Over 140,000 Visas To Indian Students | 1.40 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா: அமெரிக்க தூதரகம் சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவில் உள்ள தூதரகம் மற்றும் துணைத்தூதரகங்கள் மூலம் 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி சாதனை படைக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2022ம் ஆண்டு அக்., முதல் 2023 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இதுவரை இல்லாத சாதனையாக, இந்தியாவில் உள்ள தூதரகம் மற்றும் துணைத்தூதரக அலுவலகங்கள் மூலம் 1,40,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டு உள்ளது. … Read more

Have Zero-Tolerance Approach To Terrorism: India On Ties With Palestine | பயங்கரவாதத்தை சற்றும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்: ஐ.நா.,வில் இந்தியா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: பயங்கரவாதத்தை சற்றும் பொறுத்துக் கொள்ளாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ருசிரா கம்போஜ் பேசியதாவது: இந்தியா எப்போதுமே பாலஸ்தீனத்துடன் இருநாட்டு நல்லுறவைப் பேணும். சுகாதாரம், கல்வி, பெண்கள் அதிகாரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் இணைந்திருக்கும். இஸ்ரேல்- காசா பிரச்னைக்கு அமைதியின் வழியில் நிரந்தரத் தீர்வு என்பதே இலக்கு. இஸ்ரேல்- காசா இடையே மனிதாபிமான … Read more

US Osprey Military Aircraft with Eight Crew Crashes Off Japan | அமெரிக்கா ராணுவ விமானம் விபத்து

டோக்கியோ: ஜப்பானின் யாகுஷிமா தீவு அருகே அமெரிக்காவின் ஆஸ்ப்ரே ராணுவ விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் பயணம் செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். டோக்கியோ: ஜப்பானின் யாகுஷிமா தீவு அருகே அமெரிக்காவின் ஆஸ்ப்ரே ராணுவ விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் பயணம் செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe … Read more

Israel-Hamas ceasefire must be extended: US White House | இஸ்ரேல்- ஹமாஸ் போர் இடைநிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும்: அமெரிக்கா வெள்ளை மாளிகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா ஆதரிக்கிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே கடந்த மாதம், 7ம் தேதியில் இருந்து போர் நடந்து வந்தது. பின்னர் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில், நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்கத் … Read more

“பயங்கரவாதத்தை சற்றும் பொறுத்துக் கொள்ளாத கொள்கையுடன் அணுகுகிறோம்” – ஐ.நா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு

நியூயார்க்: பயங்கரவாதத்தை சற்றும் பொறுத்துக் கொள்ளாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். சர்வதேச ஒற்றுமை நாளை ஒட்டி பாலஸ்தீன மக்களுடன் இந்தியா நிற்பதாகக் கூறிய இந்தியப் பிரதிநிதி, இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இந்தியா எப்போதுமே ’இரு நாடுகள்’ தீர்வை முன்வைத்து வருகிறது என்றார். நேற்று (செவ்வாய்க்கிழமை) ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ருச்சிரா காம்போஜ், ” இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே மனிதாபிமான அடிப்படையில் … Read more

தலைவிரித்தாடும் புதிய பிரச்சினை: சோகத்தில் வடகொரியா மக்கள்!

பியோங்யாங், வடகொரியாவின் டாப் தலைவர் கிம் ஜாங் உன், தனது வாழ்க்கை முறையால் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிப்பவர். இப்போது கிம் ஜாங் உன்னுக்கு பதிலாக வடகொரியா மக்கள் விவாதத்திற்கு வந்துள்ளனர். அங்குள்ள மக்கள் தற்போது ஒரு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். அதுதான் முடி உதிர்தல் ஆகும். வடகொரிய மக்களின் தலைமுடி வேகமாக உதிர்கிறதாம். அதனால் அவர்களின் தலை சீக்கிரமே வழுக்கையாகிவிடும் என்ற அபாயம் உள்ளது. நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, முடி உதிர்தல் தொற்றுநோய் வட கொரியாவில் வேகமாக … Read more

அமெரிக்க சிறுமி உள்பட 17 பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ், பதிலுக்கு 39 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்

டெல் அவிவ், காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரின் திடீர் தாக்குதல் மற்றும் 240 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்ட சம்பவங்களால் நிலைகுலைந்த இஸ்ரேல், பின்னர் சுதாரித்துக்கொண்டு காசாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கிய இந்த போர், இரு தரப்பிலும் சுமார் 16 ஆயிரம் பேரை காவு கொண்டு இருக்கிறது. இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அப்பாவி மக்களே அதிகமாக உயிர் நீத்துள்ளனர். சர்வதேச நாடுகளின் … Read more