தலைவிரித்தாடும் புதிய பிரச்சினை: சோகத்தில் வடகொரியா மக்கள்!

பியோங்யாங், வடகொரியாவின் டாப் தலைவர் கிம் ஜாங் உன், தனது வாழ்க்கை முறையால் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிப்பவர். இப்போது கிம் ஜாங் உன்னுக்கு பதிலாக வடகொரியா மக்கள் விவாதத்திற்கு வந்துள்ளனர். அங்குள்ள மக்கள் தற்போது ஒரு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். அதுதான் முடி உதிர்தல் ஆகும். வடகொரிய மக்களின் தலைமுடி வேகமாக உதிர்கிறதாம். அதனால் அவர்களின் தலை சீக்கிரமே வழுக்கையாகிவிடும் என்ற அபாயம் உள்ளது. நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, முடி உதிர்தல் தொற்றுநோய் வட கொரியாவில் வேகமாக … Read more

அமெரிக்க சிறுமி உள்பட 17 பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ், பதிலுக்கு 39 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்

டெல் அவிவ், காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரின் திடீர் தாக்குதல் மற்றும் 240 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்ட சம்பவங்களால் நிலைகுலைந்த இஸ்ரேல், பின்னர் சுதாரித்துக்கொண்டு காசாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கிய இந்த போர், இரு தரப்பிலும் சுமார் 16 ஆயிரம் பேரை காவு கொண்டு இருக்கிறது. இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அப்பாவி மக்களே அதிகமாக உயிர் நீத்துள்ளனர். சர்வதேச நாடுகளின் … Read more

காலம் மாறி போச்சு….ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்

டக்கா, அண்மை காலமாக திருமண தம்பதியினர் தங்களுடைய திருமண அழைப்பிதழை வடிவமைக்க நிறைய நிறைய வித்தியாசமான முறையில் யோசித்து வருகிறார்கள். திருமண அழைப்பிதழ் நகைச்சுவைக்காக சமூக வளைதளத்தில் வைரலாகுவதால் அனைவரும் அதே போல தங்களுடைய திருமண அழைப்பிதழையும் வடிவமைக்க ஆர்வம் காட்டிவருகின்றனர். சமீபத்தில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு திருமண ஜோடி, அழைப்பிதழை ஆக்கப்பூர்வமான சிந்தனையை எடுத்து, டேப்லெட் ஸ்டிரிப்பின் பின்புறம் போல வடிவமைத்துள்ளனர். இது போன்ற புதுமையான மற்றும் நகைச்சுவையான திருமண அழைப்பிதழ்கள் சமூக வலைதளங்களில் … Read more

Sikh organization condemns Indias blockade of Dudar | இந்திய தூதர் முற்றுகை : சீக்கிய அமைப்பு கண்டனம்

நியூயார்க் :அமெரிக்காவில், குருத்வாராவுக்குச் சென்ற அந்நாட்டுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சந்துவை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்ட சம்பவத்துக்கு, ‘சீக்ஸ் ஆப் அமெரிக்கா’ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தின் லாங் ஐலேண்டு என்ற இடத்தில் உள்ள சீக்கிய குருத்வாராவில், அந்நாட்டுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சந்து சமீபத்தில் வழிபாடு நடத்தினார். அப்போது, ஒருசில காலிஸ்தான் ஆதரவாளர்கள், அவரை முற்றுகையிட்டு, காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை குறித்து கேள்வி … Read more

போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு எதிரொலி; இஸ்ரேல் பணய கைதிகளின் அடுத்த பட்டியல் தயார்

டெல் அவிவ், இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, அக்டோபர் 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த இந்த போரில், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்த சூழலில், இஸ்ரேல் … Read more

புகைப்பிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்குகிறது நியூசிலாந்து.. கவலை தெரிவிக்கும் வல்லுநர்கள்

வெலிங்டன்: நியூசிலாந்தில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியை விட, கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான தேசிய கட்சி அதிக இடங்களை பெற்றது. அதன்பின்னர் 2 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் லக்சன் (வயது 53), நாட்டின் பிரதமராக பதவியேற்றார். பின்னர் பேசிய பிரதமர் லக்சன், … Read more

உக்ரைனை தாக்கிய பனிப்புயலில் 10 பேர் உயிரிழப்பு – இயல்பு வாழ்க்கை முடக்கம்

கீவ்: உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியான ஒடேசா ஒப்லாஸ்டை (Odesa Oblast) கடுமையானப் பனிப்புயல் தாக்கியதில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும், இரண்டு குழந்தைகள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளையே உற்று நோக்க வைத்தது உக்ரைன் – ரஷ்யா போர். சுமார் 21 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது கொடூரத் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதனால் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், நவம்பர் … Read more

மேலும் 11 இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் விடுவிப்பு: போர் நிறுத்தம் நீட்டிப்பால் காசா மக்கள் நிம்மதி

காசா நகர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில் திங்கள் பின்னிரவில் மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதற்குப் பதிலாக சிறையில் இருந்து 33 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடியில் காசாவில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உள்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். … Read more

டிசம்பர் முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் மலேசியா செல்லலாம்

கோலாலம்பூர்: இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் இனி விசா இன்றி மலேசியாவுக்கு வருகை தரலாம் என அந்த நாட்டின் பிரதமர்அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். அந்நிய செலவாணியை அதிகரிக்கும் நோக்கில் மலேசிய அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. புத்ரஜெயாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் நீதிக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மலேசியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கூடுதல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதன் மூலம் அதிக … Read more