Sexually Assaulted By Powerful Men In Parliament: Australian Lawmaker | பார்லி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல்: ஆஸி., பெண் எம்.பி., கண்ணீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிட்னி: ஆஸ்திரேலிய பார்லிமென்ட் வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பெண் எம்.பி., ஒருவர் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக லிடியா தோர்ப் என்ற பெண் எம்.பி., நேற்று கூறியதாவது: சக்திவாய்ந்த நபரால் பாலியல் ரீதியான கருத்துகளால் மோசமாக விமர்சனத்திற்கு உள்ளானதுடன், படிக்கட்டில் தள்ளிவிடப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். சக எம்.பி., ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், இது தொடர்பாக புகாரை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி மிரட்டல் விடுத்தார். பெண்கள் … Read more

பிபர்ஜாய் புயல் எதிரொலி.. அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டதாக பாக்.அரசு அறிவிப்பு

பிபர்ஜாய் புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தானின் சிந்து, கராச்சி ஆகிய மாகாணங்களின் கடலோரப் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். கடலோர மாவட்டங்களில் இருந்து சுமார் 66 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். புயலின் உண்மையான பாதிப்பு என்ன என்பது நாளைக்குதான் தெரியும் என்று கூறிய அவர், அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். அனைத்து நிவாரணப்பணிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார். புயல் … Read more

NIA Releases Photos Of Suspects In March Attack On Indian High Commission In London | லண்டனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் விவகாரம்: குற்றவாளிகள் அடையாளம் கண்டுப்பிடிப்பு: என்ஐஏ தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில், கடந்த மார்ச் மாதத்தில் தாக்குதல் நடத்தி, இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் கண்டிருப்பதாக தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாக, கடந்த மார்ச் 19ல், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் துாதரகத்திற்குள் புகுந்து, அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், அங்கு கம்பீரமாக பறந்து கொண்டிருந்த நம் நாட்டின் … Read more

கிரீஸ் கடலில் படகு கவிழ்ந்து 17 அகதிகள் உயிரிழப்பு

ஏதென்ஸ்: லிபியாவிலிருந்து ஏதென்ஸ் நகருக்கு சட்டவிரோதமாக வந்த அகதிகள் அங்கிருந்து இத்தாலி செல்ல இருந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அங்குள்ள மீன்பிடி படகில் அவர்கள் ஏறி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அந்த படகு கிரீஸ் கடலோர பகுதியில் கவிழ்ந்தது. படகு கவிழ்ந்த தகவலை தொடர்ந்து கடற்படைக் கப்பல் களுடன் ராணுவ விமானம், ஹெலிகாப்டர், 6 மீட்புப் படகுகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. இந்த விபத்தில் சிக்கி 17 அகதிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் … Read more

5 படுக்கையறைகள் மட்டுமே உள்ள இந்த வீட்டின் விலை 16000 கோடி ரூபாய்! வாங்க ரெடியா?

Latest Costliest Home: ஐந்து படுக்கையறைகள் மட்டுமே உள்ள வீடு 60,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இருந்தாலும் 16000 கோடி ரூபாய் கொடுத்து வாங்க ஒரு இந்தியரும் தயாராக இருக்கிறாராம்!

ஹைதராபாத் இளம்பெண் லண்டனில் கொலை: பிரேசில் இளைஞர் கைது

ஹைதராபாத்: லண்டனுக்கு படிக்கச் சென்ற ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண், பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞரால், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மற்றொரு பெண்ணும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹைதராபாத் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வினி (27). இவர் பட்ட மேற்படிப்பு (எம்.எஸ்) படிக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன் சென்றார். அங்கு தேஜஸ்வினி தனது தோழி அகிலா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் ஒரே வீட்டில் வசித்து … Read more

Indian-origin woman stabbed to death in London | இந்திய வம்சாவளி பெண் லண்டனில் குத்தி கொலை

லண்டன், வடக்கு லண்டனில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 27 வயது பெண், கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். சந்தேகத்தின்படி இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துஉள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனின் வடக்கு பகுதியில் வெம்ப்ளி நகரம் உள்ளது. இங்குள்ள ‘நீல்ட் கிரெசன்ட்’ என்ற குடியிருப்பு பகுதியில், இந்திய வம்சாவளி பெண்கள் இருவர் கத்தியால் குத்தப்பட்டனர். இந்த சம்பவம், நேற்று முன்தினம் காலை அப்பகுதியின் சாலை ஓரத்தில் நடந்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் விரைந்து … Read more

‘வார்னர் புரோஸ்’ நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஹாரி பாட்டரின் மாயாஜால உலகை பிரதிபலிக்கும் பிரமாண்ட ஸ்டூடியோ…!

ஹாரி பாட்டர் திரைப்படங்களில் வரும் மாயாஜால உலகத்தை மெய்பிப்பதைபோல் ஜப்பானில் பிரமாண்ட ஸ்டூடியோவை வார்னர் புரோஸ் (Warner Bros) நிறுவனம் அமைத்துள்ளது. லண்டனில் பத்து ஆண்டுகளுக்கு முன் அந்நிறுவனத்தால்  வடிவமைக்கப்பட்ட ஸ்டூடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்ததை அடுத்து, மேம்படுத்தப்பட்ட ஸ்டூடியோவை டோக்கியோவில் அமைத்துள்ளது. ஆசிய அளவில் ஹாரி பாட்டர் ரசிகர்களை கவரும் விதமான இந்த ஸ்டூடியோ வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில், ஒரு டிக்கெட்டின் விலை இந்திய மதிப்பில் 3,700 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும், ஆகஸ்ட் மாதம் … Read more

103 killed in boat accident in Nigeria | படகு விபத்து நைஜீரியாவில் 103 பேர் பலி

அபுஜா, நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 103 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் குவாரா மாகாணத்தின் பதிகி மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள், அண்டை மாகாணமான நைஜரில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்று விட்டு, தங்கள் சொந்த ஊருக்கு நேற்று படகில் திரும்பினர். அப்போது, எதிர்பாராதவிதமாக படகு ஆற்றில் மூழ்கி கவிழ்ந்தது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், உயிருக்கு போராடிய 100க்கும் … Read more