India-Bangladesh Agreement on Border Development Works | எல்லையில் வளர்ச்சி பணிகள் இந்தியா – வங்கதேசம் ஒப்பந்தம்

புதுடில்லி, எல்லை பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ, இந்தியா – வங்கதேசம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. நம் அண்டை நாடான வங்கதேசத்துடன், 4,096 கி.மீ., துார எல்லையை பகிர்ந்து கொள்கிறோம். வங்கதேசத்தில் இருந்து பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் ஊடுருவுவதும், கடத்தல் நடப்பதும் அதிகளவில் உள்ளது. இதை தடுப்பதற்காக, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை மற்றும் வங்கதேச எல்லைப் படையின் தலைவர்களின் … Read more

உலகின் மிக துல்லியமான தகவல் ஆதாரமாக டுவிட்டரை மாற்ற திட்டம்

வாஷிங்டன், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு டுவிட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலக பணக்காரரான எலான் மஸ்க் இந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு வாங்கிய பின்பு டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வந்தார். இதில் தவறான தகவல்களை கையாள்வதில் அவர் மேற்கொண்ட அணுகுமுறை கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. இதனையடுத்து டுவிட்டரின் தலைமை நிர்வாகியாக லிண்டா யாகரினோ என்ற பெண் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் தற்போது லிண்டா யாகரினோ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டுவிட்டர் 2.0-க்கான திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் … Read more

PM Modi participates in Yoga Day at UN | ஐ.நா.,வில் யோகா தினம்: பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடில்லி, அமெரிக்காவுக்கு முதல் முறையாக அரசு முறை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா.,வில் நடக்கும் யோகா தினம் உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கடந்த 2014ல் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது, அமெரிக்காவுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், முதல் முறையாக அரசு முறை பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளார். வரும் 21 முதல் 24ம் தேதி வரை அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். 21ம் தேதி முதல் நிகழ்ச்சியாக, … Read more

பெலாரசில் தேசிய அவசர நிலை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

மின்ஸ்க், கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசில் தேர்தல் மோசடி காரணமாக உள்நாட்டு அரசியல் நெருக்கடி நிலவி வந்தது. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் 2006-ம் ஆண்டு பெலாரஸ் நாட்டின் மீது தேசிய அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் பெலாரசின் ஜனநாயக நடைமுறைகள், அரசியல் அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2021-ல் இந்த அவசர நிலை உத்தரவு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு ஆண்டுக்கு பெலாரஸ் மீதான தேசிய … Read more

இதுவரை எந்த அதிபரும் செய்யாத அளவில் அதிபர் ஜோ பைடன் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு…!

அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்த அதிபரும் செய்யாத அளவில் அதிபர் ஜோ பைடன் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு  தன் மீது போலி வழக்குகளை பதிவு செய்துவருவதாக டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அரசுக்கு சொந்தமான ரகசிய ஆவணங்களை எடுத்துச்சென்ற வழக்கில் மியாமி நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அதிபர் டிரம்ப் தான் குற்றமற்றவன் என வாதாடினார். நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்த டிரம்ப், தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே தன் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக … Read more

அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கு: அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு

மியாமி, அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால் தனது பதவி காலத்தில் கையாண்ட ஆவணங்களை ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்காமல் அவற்றை தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட ரகசிய … Read more

விண்வெளியில் பூத்த பூ – நாசா பகிர்ந்த புகைப்படம்

வாஷிங்டன்: விண்வெளியில் பூத்த பூவின் படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ பகிர்ந்துள்ளது. இது விண்வெளி வீரர்களுக்காக பரிசோதனை முயற்சியாக வளர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் தொடங்கி அந்தக் கோள்களில் நீர் உள்ளதா என்பது வரையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அப்படி … Read more

'பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம்' – வெள்ளை மாளிகை

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூன் 21-ந்தேதியில் இருந்து ஜுன் 24-ந்தேதி வரை அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு ஜுன் 22-ந்தேதி, சுமார் 7 ஆயிரம் இந்திய-அமெரிக்கர்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் முன்னிலையில் வழங்குப்படும் வரவேற்பை பிரதமர் மோடி ஏற்கவிருக்கிறார். தொடர்ந்து அன்றைய தினம் அமெரிக்க நாடாளுமன்ற இரு சபைகளின்(பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை) … Read more

கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்ததில் 78 பேர் உயிரிழப்பு

ஏதென்ஸ்: கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த கிரீஸ் கடலோர காவல்படை அதிகாரிகள், “கிரீஸ் கடற்கரையில் இருந்து 47 நாட்டிகல் மைல் தொலைவில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில் படகில் வந்தவர்களில் குறைந்தபட்சம் 78 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக மீட்புப் பணிகளை தொடர்ந்து … Read more

வட கொரிய அரசிடம் ரூ.290 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த தென்கொரிய அரசு..!

தென்கொரிய அரசின் செலவில் கட்டப்பட்ட தகவல் தொடர்பு அலுவலகத்தை தகர்த்தமைக்காக வட கொரிய அரசிடம் 290 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தென்கொரியா வழக்கு தொடர்ந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், தென்கொரிய அரசின் செலவில், வட கொரியாவின் கேசோங் நகரில் 48 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 2018 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தகவல் தொடர்பு அலுவலகத்தை இரண்டே ஆண்டுகளில் வடகொரிய அரசு வெடி வைத்து தகர்த்தது. அதற்கு நஷ்ட ஈடாக 290 … Read more