Chandrayaan-3 Mission: ISRO shares pictures of Earth and Moon. | சந்திரயான் கிளிக் செய்த பூமி, நிலவின் தெளிவான படங்கள்

புதுடில்லி: வரும், 23ம் தேதி நிலவில் இறங்கவிருக்கும் சந்திரயான்-3 விண்கலம் எடுத்த புவி, மற்றும் நிலவு தொடர்பான படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்கு, சந்திரயான்-3 விண்கலத்தை, இஸ்ரோ ஜூலை 14ல் வெற்றிகரமாக செலுத்தியது. ஆக-5ம் தேதி நிலவு சுற்று வட்டப் பாதையை விண்கலம் வெற்றிகரமாக அடைந்தது. இதைத் தொடர்ந்து, நிலவு சுற்று வட்டப்பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. சுற்று வட்டப் பாதையில், அடுத்த நிலைக்கு, சந்திராயன் -3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நிலவை நெருங்கியுள்ள சந்திராயன், … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: அடுத்தது என்ன?

கராச்சி: கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அதிபர் ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் பாக்கி இருந்த நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் முன்கூட்டியே நேற்று நள்ளிரவில் கலைக்கப்பட்டது. பாகிஸ்தானில் கடந்த 2018-ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது.இம்ரான் … Read more

Pakistan National Assembly Dissolved: Whats Next For Crisis-Hit Country | பாகிஸ்தான் பார்லிமென்ட் கலைப்பு: தேர்தல் நடக்குமா?

இஸ்லாமாபாத்: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில், பார்லிமென்ட் நேற்று(ஆக.,09) கலைக்கப்பட்டது. ஆனால், பொருளாதார சூழ்நிலை காரணமாக, தேர்தல் நடத்தப்படுவது தள்ளிப் போகும் சூழல் உள்ளது. 2018 ல் பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு தேர்தல் நடந்தது. அப்போது பிரதமராக இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டார். அவரது ஆட்சி கவிழவே, ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. பதவிக்காலம் வரும் 12ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்நிலையில், பார்லிமென்ட்டை கலைக்கும்படி அதிபருக்கு, ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரை … Read more

உயிரியல் ஆயுதம்… அணுகுண்டு தாக்குதல்… பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!

Baba Vanga Prediction : 2023 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்பு மக்களின் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

இத்தாலியின் தீவில் படகு மூழ்கி 41 பேர் உயிரிழப்பு

ரோம்: இத்தாலியின் லம்பேடுசா தீவில் படகு உடைந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் பகுதியிலிருந்து ஒரு படகு நேற்று முன்தினம் இத்தாலியை நோக்கி வந்துள்ளது. ஏராளமான அகதிகள் பயணித்த இந்த படகு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவு அருகே வந்தபோது திடீரென உடைந்துள்ளது. இதில் பயணித்தவர்கள் கடலில் விழுந்தனர். சம்பவம் அறிந்த கடலோர காவல் படையினரும், அந்த வழியாக வந்த சரக்கு கப்பலைச் சேர்ந்த வீரர்களும் அங்கு சென்று மீட்புப் பணியில் … Read more

Court refuses to stay Imran Khans sentence | இம்ரான்கான் தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய இம்ரான்கான் மனுவை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்தது. பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர், இம்ரான் கான் 70. இவர் , பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் என்ற கட்சியின் தலைவராக உள்ளார்.தொடர்ந்து, கடந்த ஓராண்டில் மட்டும், இம்ரான் கானுக்கு எதிராக, 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையே, ‘தோஷாகானா’ எனப்படும், அரசு கருவூல பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை … Read more

Tunisia boat accident: 41 dead | துனிசியா படகு விபத்து: 41 பேர் பலி

ரோம், துனிசியாவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 41 பேர் பலியாகினர். ஆப்ரிக்கா மற்றும் மேற்காசிய நாடுகளில் வறுமை, மோதல் போக்கு அதிகரித்து வருவதால், அங்கிருந்து பலர் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வது பல ஆண்டுகளாக தொடர்கிறது. இந்நிலையில், வட ஆப்ரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு புலம்பெயர்ந்தோர் இருந்த படகு இரு தினங்களுக்கு முன் சென்றது. இது, ஆப்ரிக்க கடற்கரையின் கெர்கென்னா பகுதி அருகே சென்றபோது திடீரென கவிழ்ந்தது. மொத்தம் … Read more

world lion day | உலக சிங்க தினம்

‘காடுகளின் ராஜா’ என சிங்கம் அழைக்கப்படுகிறது. வீரத்தின் உதாரணமாக சிங்கத்தை குறிப்பிடுகின்றனர். இதன் வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆக. 10ல் உலக சிங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. முன்பு ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா முழுவதும் சிங்கங்கள் வாழ்ந்தன. ஆனால் இன்று ஆப்ரிக்கா, ஆசியாவின் சில பகுதிகளில் மட்டுமே சிங்கம் வாழ்கின்றன. முன்பு ஆப்ரிக்காவில் 2 லட்சம் சிங்கங்கள் இருந்தன. இன்று 20 ஆயிரம் மட்டுமே உள்ளன. இந்தியாவில் 2015ல் 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020ன் படி … Read more