''நேட்டோ நாடுகள் பனிப்போர் காலத்திற்கு திரும்புகின்றன'': ரஷ்யா எச்சரிக்கை
மாஸ்கோ: நேட்டோ நாடுகள் பனிப்போர் கால திட்டங்களுக்கு திரும்புவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “நிலம் மற்றும் அதிகாரத்தின் மீது புதின் மோகம் கொண்டிருந்தார். இதில் உக்ரைன் மீது மிருகத்தனமான போரை கட்டவிழ்த்துவிட்டபோது, அவர் நேட்டோ உடைந்துவிடும் என்று பந்தயம் கட்டினார். ஆனால் அவர் தவறாக நினைத்தார். … Read more