சர்வதேச விண்வெளி சென்ற 4 வீரர்கள்| 4 soldiers who went to international space

‘நாசா’ எனப்படும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு மற்றும் மேலும் சில நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி மையத்தை, விண்வெளியில் அமைத்துள்ளன. இதில் ஆறு மாதங்கள் தங்கி, விண்வெளி வீரர்கள் ஆய்வு செய்வர். இதன்படி, அடுத்தகட்டமாக நான்கு வீரர்கள்புறப்பட்டு சென்றனர். முதல் முறையாக, நான்கு பேரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா, டென்மார்க், ஜப்பான், ரஷ்யாவைச் சேர்ந்த வீரர்கள் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளனர். ‘நாசா’ எனப்படும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு மற்றும் மேலும் சில … Read more

எமிரேட்ஸ் டிராவில் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்… ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!

மும்பையை சேர்ந்தவர் நசீம். 54 வயதான நசீம் கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஆரம்பத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றினார் நசீம். சமீபத்தில்தான் நசீம்முக்கு சூப்பர் வைஸராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. நசீம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஷேர் மார்க்கெட்டில் தான் சம்பாதித்த மொத்தத்தையும் இழந்தார். தொடர்ந்து இரண்டு நாட்களில் ஷேர் மார்க்கெட்டில் மொத்தத்தையும் இழந்தார் நசீம். அந்த இழப்பு அவரது குடும்பத்திற்கு பேரடியாக இருந்தது. … Read more

சந்திரயான்-3 வெற்றி ஒரு மகத்தான அறிவியல் சாதனை: பாகிஸ்தான் புகழாரம்

இஸ்லாமாபாத்: சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி என்பது ஒரு மகத்தான அறிவியல் சாதனை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச் புகழாரம் சூட்டியுள்ளார். நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் தரையிறங்கிய ரோவர் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இந்த … Read more

'சந்திரயான்-3' வெற்றி: இந்தியாவுக்கும், உலகுக்கும் ஒரு வரலாற்று சாதனை.. இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து

ஜெருசலேம், நிலவின் தென்துருவத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்ததற்காக உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று முன்தினம் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘சந்திரயான்-3’ வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். ‘சந்திரயான்-3’ வெற்றி இந்தியாவுக்கும், உலகுக்கும் ஒரு வரலாற்று சாதனை என்று குறிப்பிட்ட நேதன்யாகு, அனைத்து இஸ்ரேலிய குடிமக்களின் சார்பாக தனது மனமார்த்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். அதனை … Read more

தென்ஆப்பிரிக்க, பிரேசில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசுகள்

ஜோகன்னஸ்பர்க், ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு தலைவர்களுக்கு இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலை பொருட்களையும், பழமையான பொருட்களையும் பரிசளித்தார். தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசாவுக்கு தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ‘சுராஹி’ என்ற ஒரு ஜோடி குடுவையை பரிசளித்தார். சிறில் ரமாபோசாவின் மனைவிக்கு நாகாலாந்து மாநில பழங்குடியினரால் நெய்யப்பட்ட பாரம்பரிய சால்வையை வழங்கினார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு மத்தியபிரதேசத்தை சேர்ந்த பழங்குடியினரின் கோண்ட் ஓவியத்தை பரிசாக அளித்தார். … Read more

மடகாஸ்கர் மைதானத்தில் நெரிசல்: 12 பேர் பலி; 80 பேர் படுகாயம்

அன்டனானரிவோ: மடகாஸ்கரில் உள்ள ஒரு மைதானத்திற்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் உள்ள அன்டனானரிவோவில் இந்திய பெருங்கடல் தீவு விளையாட்டுகளின் தொடக்க விழா நேற்று (ஆக. 25) தொடங்கியது. மடகாஸ்கர் தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தின் நுழைவாயிலில் குவிந்திருந்தனர். திடீரென ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் நுழைய முயன்றதால் அங்கு கடும் … Read more

மடகாஸ்கரில் ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசல்; 13 பேர் உயிரிழப்பு

அன்டானாநாரிவோ, மடகாஸ்கர் நாட்டில் இந்திய பெருங்கடல் தீவு போட்டிகள் வருகிற செப்டம்பர் 3-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக அந்நாட்டின் பரியா என்ற தேசிய ஸ்டேடியத்தில் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரசிகர்கள் பலர் திரண்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள். இதுதவிர இந்த சம்பவத்தில் சிக்கி, 80 பேர் … Read more

BRICS அமைப்பில் பாகிஸ்தானிற்கு நோ என்ட்ரி… கைவிட்ட சீனா, ரஷ்யா!

கடந்த பல ஆண்டுகளாக பிரிக்ஸ் அமைப்பில் சேர பாகிஸ்தான் முயற்சித்து வரும் நிலையில், தற்போது, பிரிக்ஸ் அமைப்பில் பாகிஸ்தானால் மீண்டும் இடம் பெற முடியவில்லை.

‘அழகாக இருக்கிறார்’ – ட்ரம்ப்பின் ‘மக்‌-ஷாட்’ குறித்து ஜோ பைடன் கருத்து

வாஷிங்டன்: போலீஸார் எடுத்த மக்-ஷாட் புகைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழகாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அட்லாண்டா கோர்ட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் போலீஸார் சில நிமிடங்களில் ட்ரம்ப்பை பிணையில் விடுவித்தனர். ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் ட்ரம்ப் 13 குற்றச் செயல்களை எதிர்கொள்கிறார். இதே … Read more