ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு

வாஷிங்டன்: கடந்த 2017 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரை அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் பதவி வகித்தார். அவர் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறியபோது அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் ட்ரம்பின் வீடு, அலுவலகங்களில் எப்பிஐ புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 11,000 அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 100 ஆவணங்கள், அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் ஆகும். இதன்பேரில் … Read more

கியூபாவில் பெய்த கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு..!

கியூபா நாட்டில் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தீவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பல இடங்களில் பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பல கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அங்குள்ள Jiguani நகரத்தை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு அங்கு கனமழை நீடிக்கும் என்று … Read more

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பார்ட்டிகேட் விவகாரம் காரணமாக தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பார்ட்டிகேட் விவகாரம் என்ன?: போரிஸ் ஜான்சன் 2019ல் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார். அந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தொடங்கிய கரோனா தொற்று ஓரிரு மாதங்களிலேயே உலகை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. பிரிட்டன் மோசமான கரோனா பாதிப்புகளை சந்தித்தது. இரு தவணை தடுப்பூசிக்குப் பின்னரும் அங்கு கரோனா … Read more

காட்டுத் தீயை கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்கள் கனடாவில் ஆடிப் பாடி நடனம்

கனடாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்கள் ஆடிப் பாடி தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டனர். கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத் தீயை விரைந்து கட்டுப்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து 200 வீரர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். Edmonton நகருக்கு வந்தடைந்த வீரர்கள், தங்களது உடைமைகளுடன் விமான நிலையத்திலேயே நடனமாடினர். தீயணைப்பு பணியில் களமிறங்குவதற்கு முன்பாக, தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளும் விதமாக, தென்னாப்பிரிக்க கொடிகளை ஏந்தியவாறு பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். … Read more

Case against former president in 7 sections | மாஜி அதிபர் மீது 7 பிரிவுகளில் வழக்கு

வாஷிங்டன்,-அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து ரகசிய ஆவணங்களை திருடிச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்நாட்டு முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது, ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2016ல் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். நான்கு ஆண்டுகள் இவர் பதவி வகித்த நிலையில், 2020ல் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, வெள்ளை மாளிகையை காலி செய்த டிரம்ப், … Read more

உள்நாட்டு பிரச்சினையில் உலக நாடுகளை தலையிடக் கோருவது நாட்டிற்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் – அமைச்சர் ஜெய்சங்கர்!

இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையில் உலக நாடுகளை தலையிடக் கோருவது நாட்டிற்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். டெல்லி ஆர்யபட்டா கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒவ்வொரு நாட்டிலும் பிரச்சினைகளும் வேறுபாடுகளும் இருப்பதாக கூறினார். தனிப்பட்ட நபர்களுக்கு தனிப்பட்ட கருத்துகள் இருப்பது இயற்கையே என்று குறிப்பிட்ட அவர், அதற்காக அன்னிய நாடுகளை இந்திய பிரச்சினைகளில் தலையிடுமாறு கோருவது மேலும் பெரிய பிரச்சினைகளைத் தான் கொண்டு வரும் என்றார். அந்த வகையில் இந்தியாவை இழிவுபடுத்தும் … Read more

சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் ரோபோவை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்..!

சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் வகையில் ரோபோ ஒன்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். இதற்காக புரோக்ராம் செய்யப்பட்ட அந்த ரோபோ, மனிதர்கள் உருவாக்கும் சமையல் வீடியோவைப் பார்த்து, அது என்ன ரெசிபி என்பதை கண்டுபிடித்து அந்த உணவை தானே தயார் செய்து அசத்தியுள்ளது. இதன் பின் 8 சாலட் குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றை அந்த ரோபோட்டிடம் கொடுத்ததாகவும், அதனை படித்து, அந்த 8 உணவுகளையும் சமைத்த ரோபோட், ஒன்பதாவதாக தானே ஒரு … Read more

காதலியை கொன்று துண்டுகளாக்கி சுவற்றில் புதைத்த கொடூரம்! மனம் பதற வைக்கும் கொலை!

இளைஞர் ஒருவர் தனது 22 வயது லிவ்-இன் பார்ட்னரை கொடூரமாக கொலை செய்த பின் காதலியின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் வைத்து சுவரில் புதைத்து வைத்துள்ளார். 

ஆண் முதலையே இல்லாமல் கருவுற்ற பெண் முதலை.. இப்படி ஒரு காரணம் இருக்கா?

சேன் ஜோஸ்: உலகில் பல அதிசயங்கள் நடக்கின்றன. அந்த வரிசையில், 16 ஆண்டுகளாக தனிமையில் வைக்கப்பட்டிருந்த பெண் முதலை ஒன்று கருவுற்று முட்டையிட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் கோஸ்டாரிகா நாட்டில் உயிரியல் பூங்காவில் முதலைப் பண்ணை உள்ளது. இதில் பெண் முதலை ஒன்று 16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்தது. மற்ற முதலைகளுடன் போடப்பட்ட போது இது … Read more

Putins decision to stockpile nuclear weapons in Belarus against Ukraine | உக்ரைனுக்கு எதிராக பெலாரஸில் அணு ஆயுதங்களை குவிக்க புடின் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராக ஜூலை முதல் வாரம் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை குவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்ய சென்றிருந்த பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோ அதிபர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட பெலாரஸ் ராணுவம் பயிற்சி மேற்கொள்வது, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை சேகரித்து … Read more