ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக 2 அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கைது

சான்டியாகோ, சீனாவை சேர்ந்தவர் ஜிஞ்சாவோ வெய். 22 வயதான இவர் அமெரிக்க கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். லாஸ் ஏஞ்சல்சின் வென்சுரா கடற்படை தளத்தில் பணி புரிந்து வந்தவர் வென்ஹெங் ஜாவோ (26). இருவரும் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், போர் கால பயிற்சிகள், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் நவீன தளவாடங்கள் குறித்து சீனாவுக்கு உளவு சொன்னதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இருவரையும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து சான்டியாகோவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை … Read more

டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்த UPI Lite பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டது

UPI Transaction: டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்துவதற்காக UPI லைட்டின் பரிவர்த்தனை வரம்பை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக RBI உயர்த்தியுள்ளது.

ஈக்வடார் தேர்தல் பிரச்சாரத்தில் ஷாக்… அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொலை!

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் Build Ecuador Movement என்ற கட்சியின் சார்பாக பெர்னாண்டோ வில்லவிசென்சியோ அதிபர் வேட்பாளராக களமிறங்க முடிவு செய்யப்பட்டது. இவர் தற்போது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் 2 வயது குறைப்பு ..தென் கொரியா அரசு அறிவிப்பு ஈக்வடார் நாட்டில் அதிர்ச்சி இதையொட்டி தீவிர … Read more

China has not appointed an ambassador to India for 10 months | 10 மாதங்களாக இந்தியாவுக்கான தூதரை நியமிக்காத சீனா

பீஜிங்: கடந்த 10 மாதங்களாக இந்தியாவுக்கான தூதரை சீனா நியமிக்காமலேயே இருந்து வருகிறது. இந்தியாவுக்கான சீன தூதராக அந்நாட்டின் வெளியுறவு துறையின் திட்டம் மற்றும் கொள்கை பிரிவு இயக்குனராக இருந்த சன் வெய்டாங் 2019ல் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் அவரை சீன வெளியுறவு துணை அமைச்சராக நியமித்தது சீன அரசு. இதனையடுத்து இந்தியாவுக்கான சீன தூதர் பதவி காலியானது. இந்தியா – சீனா தலைவர்கள் இடையே நடக்கவுள்ள சந்திப்புகள், ஜி-20 கூட்டங்கள் … Read more

ஹவாய் காட்டுத் தீயால் உருக்குலைந்த நகரம் – 6 பேர் உயிரிழப்பு

மவுயி (Maui): ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ள சூழலில், சுமார் 271 கட்டிட அமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் தீவு மாகாணம் ஹவாய். மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹவாய், மொத்தம் 8 தீவு நகரங்களை உள்ளடக்கியது. அதில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது மவுயி. 727 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தீவு நகரத்தில் கடந்த 2020 கணக்கெடுப்பின்படி 1.64 லட்சம் மக்கள் உள்ளனர். … Read more

Chandrayaan-3 Mission: ISRO shares pictures of Earth and Moon. | சந்திரயான் கிளிக் செய்த பூமி, நிலவின் தெளிவான படங்கள்

புதுடில்லி: வரும், 23ம் தேதி நிலவில் இறங்கவிருக்கும் சந்திரயான்-3 விண்கலம் எடுத்த புவி, மற்றும் நிலவு தொடர்பான படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்கு, சந்திரயான்-3 விண்கலத்தை, இஸ்ரோ ஜூலை 14ல் வெற்றிகரமாக செலுத்தியது. ஆக-5ம் தேதி நிலவு சுற்று வட்டப் பாதையை விண்கலம் வெற்றிகரமாக அடைந்தது. இதைத் தொடர்ந்து, நிலவு சுற்று வட்டப்பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. சுற்று வட்டப் பாதையில், அடுத்த நிலைக்கு, சந்திராயன் -3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நிலவை நெருங்கியுள்ள சந்திராயன், … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: அடுத்தது என்ன?

கராச்சி: கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அதிபர் ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் பாக்கி இருந்த நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் முன்கூட்டியே நேற்று நள்ளிரவில் கலைக்கப்பட்டது. பாகிஸ்தானில் கடந்த 2018-ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது.இம்ரான் … Read more

Pakistan National Assembly Dissolved: Whats Next For Crisis-Hit Country | பாகிஸ்தான் பார்லிமென்ட் கலைப்பு: தேர்தல் நடக்குமா?

இஸ்லாமாபாத்: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில், பார்லிமென்ட் நேற்று(ஆக.,09) கலைக்கப்பட்டது. ஆனால், பொருளாதார சூழ்நிலை காரணமாக, தேர்தல் நடத்தப்படுவது தள்ளிப் போகும் சூழல் உள்ளது. 2018 ல் பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு தேர்தல் நடந்தது. அப்போது பிரதமராக இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டார். அவரது ஆட்சி கவிழவே, ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. பதவிக்காலம் வரும் 12ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்நிலையில், பார்லிமென்ட்டை கலைக்கும்படி அதிபருக்கு, ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரை … Read more

உயிரியல் ஆயுதம்… அணுகுண்டு தாக்குதல்… பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!

Baba Vanga Prediction : 2023 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்பு மக்களின் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

இத்தாலியின் தீவில் படகு மூழ்கி 41 பேர் உயிரிழப்பு

ரோம்: இத்தாலியின் லம்பேடுசா தீவில் படகு உடைந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் பகுதியிலிருந்து ஒரு படகு நேற்று முன்தினம் இத்தாலியை நோக்கி வந்துள்ளது. ஏராளமான அகதிகள் பயணித்த இந்த படகு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவு அருகே வந்தபோது திடீரென உடைந்துள்ளது. இதில் பயணித்தவர்கள் கடலில் விழுந்தனர். சம்பவம் அறிந்த கடலோர காவல் படையினரும், அந்த வழியாக வந்த சரக்கு கப்பலைச் சேர்ந்த வீரர்களும் அங்கு சென்று மீட்புப் பணியில் … Read more