அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு – 2 பேர் உயிரிழப்பு..!

வாஷிங்டன், அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சமயம் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியதாக 19 வயதான நபர் கைது செய்யப்பட்டார். விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தின் அல்ட்ரியா தியேட்டரின் வெளியே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த பகுதியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றதாக … Read more

World Test Championship Final: India Bowling | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: இந்தியா பவுலிங்

லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி ‘டாஸ்’ வென்று, ‘பவுலிங்’ தேர்வு செய்தது. இப்போட்டியில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டையுடன் விளையாடினர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பைனலுக்கு தகுதி … Read more

உக்ரைனின் அணையில் உடைப்பு – பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு

கீவ், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 469 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் கார்சன் மாகாணத்தில் கக்ஹொவ்ஸ்கா என்ற அணை உள்ளது. இந்த அணையில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உக்ரைனின் கார்சன் நகரில் … Read more

Pakistan leases out iconic Roosevelt Hotel in New York to NYC Administration for three years; aims to generate$220 million | பொருளாதார நெருக்கடி: பிரபல ஓட்டலை குத்தகைக்கு விட்ட பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: அமெரிக்காவில் உள்ள தங்கள் நாட்டுக்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஓட்டலை, நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் அரசு 3 ஆண்டுகளுக்கு 220 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பு படி ரூ.1815 கோடி) குத்தகைக்கு விட்டுள்ளது. பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் உச்சத்தால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. மக்கள் அன்றாட வாழ்வில் இரு வேளை உணவு கிடைக்கவே போராடி … Read more

சூரினாமில் வாழும் இந்தியர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு

பராமரிபோ, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி திரவுபதி முர்மு சுரினாம் நாட்டிற்குச் சென்றடைந்தார். தொடர்ந்து சுரினாம் நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சாந்தோகியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் … Read more

உக்ரைன் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது: ஐ. நா. கண்டனம்

கீவ்: உக்ரைனின் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் உக்ரைனில் உள்ள 10 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உக்ரைனின் கெர்சன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே, கடந்த 1956-ம் … Read more

அமெரிக்காவின் எச்-1பி விசாக்களை பெறுவதில் இந்தியர்கள் முதலிடம்

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழில்களில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1பி விசாவை பெற்றவர்களில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அமெரிக்காவில் 2022-ம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது … Read more

உக்ரைனில் முக்கிய அணை தகர்ப்பு; மக்கள் வெளியேற்றம் – ரஷ்ய படைகள் மீது குற்றச்சாட்டு

கீவ்: ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் உக்ரைனில் உள்ள 10 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உக்ரைனின் கெர்சன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே, கடந்த 1956-ம் ஆண்டு 98 அடி உயரத்தில், 3.2 கி.மீ நீளத்தில் கக்கோவ்கா அணை கட்டப்பட்டது. இங்கு கக்கோவ்கா நீர்மின் நிலையமும் உள்ளது. … Read more

ஒரு மாதமாக சிறையில் இருந்த பாக். முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி விடுதலை

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தேசதுரோகம், ஊழல் உள்ளிட்ட வழக்குகளும் அடக்கம். இதனிடையே, ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9-ம் தேதி இம்ரான்கானை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அதேவேளை, இம்ரான்கான் கைது செய்யப்பட்டப்போது அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல இடங்களில் … Read more