உக்ரைன் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது: ஐ. நா. கண்டனம்

கீவ்: உக்ரைனின் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் உக்ரைனில் உள்ள 10 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உக்ரைனின் கெர்சன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே, கடந்த 1956-ம் … Read more

அமெரிக்காவின் எச்-1பி விசாக்களை பெறுவதில் இந்தியர்கள் முதலிடம்

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழில்களில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1பி விசாவை பெற்றவர்களில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அமெரிக்காவில் 2022-ம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது … Read more

உக்ரைனில் முக்கிய அணை தகர்ப்பு; மக்கள் வெளியேற்றம் – ரஷ்ய படைகள் மீது குற்றச்சாட்டு

கீவ்: ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் உக்ரைனில் உள்ள 10 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உக்ரைனின் கெர்சன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே, கடந்த 1956-ம் ஆண்டு 98 அடி உயரத்தில், 3.2 கி.மீ நீளத்தில் கக்கோவ்கா அணை கட்டப்பட்டது. இங்கு கக்கோவ்கா நீர்மின் நிலையமும் உள்ளது. … Read more

ஒரு மாதமாக சிறையில் இருந்த பாக். முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி விடுதலை

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தேசதுரோகம், ஊழல் உள்ளிட்ட வழக்குகளும் அடக்கம். இதனிடையே, ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9-ம் தேதி இம்ரான்கானை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அதேவேளை, இம்ரான்கான் கைது செய்யப்பட்டப்போது அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல இடங்களில் … Read more

ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: கூர்ந்து கவனிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்காவின் சான் ப்ரான்சிஸ்கோவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் அமெரிக்கர்கள் நிறைய பேர் இருக்கலாம் எனக் கருதப்படுவதால் இது தொடர்பாக உற்று நோக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. AI-173 என்ற ஏர் இந்தியா விமானம் 216 பயணிகள் மற்றும் 16 விமான சிப்பந்திகளுடன் டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் ப்ரான்சிஸ்கோவிற்குப் புறப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை இன்ஜின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் ரஷ்யாவின் … Read more

Aliens: அமெரிக்காவிடம் வேற்றுகிரகவாசிகளின் பொருட்கள் இருப்பது ஏன்? அதிர்ச்சித் தகவல்

Aliens and UFO Latest Update: மனிதகுலத்திற்கு ஏலியன்கள் வரமா? சாபமா? அமெரிக்காவிடம் வேற்றுகிரகவாசிகளின் பொருட்கள் இருப்பது ஏன்? அதிர்ச்சித் தகவல்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் படுகொலை; 5 பேர் காயம்

ரிச்மாண்ட்: அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் ரிச்மாண்ட் எனுமிடத்தில் உள்ள வர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். அந்த வளாகத்தில் உள்ள அல்டீரியா தியேட்டர் எனும் அரங்கில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் வெளியேவரும்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக ரிச்மாண்ட் போலீஸ் … Read more

IQAir: இந்தியாவில் அதிகரிக்கும் காற்று மாசு! கங்கை சமவெளியும் விலக்கல்ல

Top 10 Air polluted Cities Of India: இந்தியாவில் காற்றின் தர நிலை தொடர்ந்து குறைந்து வருவது கவலைகளை அதிகரிக்கிறது. அதிலும் காசி உட்பட கங்கை சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது

துடிப்பான ஜனநாயகத்தை கொண்ட நாடாக திகழ்கிறது இந்தியா: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை புகழாரம்

வாஷிங்டன்: துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை புகழாரம் சூட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் 22-ம் தேதி செல்லும் இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அவர் 2016-ம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தார். தற்போதைய பயணத்தின்போது பிரதமர் மோடி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் … Read more