ஆள் கடத்தல் பாலியல் சீண்டல் செய்த 70 வயது NRI! 20 ஆண்டு சிறை தண்டனைக்கு வாய்ப்பு

Human Trafficking By NRI in Newyork: பணி ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி, “வணிக ரீதியான பாலியல் செயல்களில்” ஈடுபடும்படி கட்டாயப்படுத்திய அமெரிக்க வாழ் இந்தியருக்கு நீதிமன்றம் என்ன தண்டனை விதிக்கும்? 

வெனிசுலாவில் வெள்ளம் காரணமாக தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து..12 பேர் பலி..!

வெனிசுலாவின் பொலிவார் மாகாணத்தில் வெள்ளம் காரணமாக தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். எல் கால்லோ பகுதியில் கனமழையால் அந்த சுரங்கம் இடிந்து விழுந்தது. கடந்த சில நாட்களாக அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 112 பேர் சுரங்க இடிபாடுகளில் இருந்து தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக சுரங்கத்தை திறந்து தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். Source … Read more

சோமாலியாவில் பயங்கரவாதிகளுடன் மோதல்: உகாண்டாவைச் சேர்ந்த 54 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு

மொகதிசு, சோமாலியாவில் பாதுகாப்புப் படையினருக்கும், அல்-ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சோமாலியா தலைநகர் மொகதிசுவிலிருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் பாதுகாப்புப் படை தளத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உகாண்டாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 54 பேர் உயிரிழந்தனர். முன்னதாக அல்-ஷபாப் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க படைகளை சோமாலியா அரசு தீவிரமாக நம்பி இருந்தது. இந்த நிலையில் டிரம்ப் ஆட்சியில் அமெரிக்க படைகள் திரும்பப் … Read more

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி… விமான சேவைகள் முடங்கும் அபாயம்!

பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், நிதி பற்றாக்குறையால், விமான நிறுவனங்கள் விரைவில் விமான போக்குவரத்து சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு முறைப் பயணமாக சூரினாம் நாட்டிற்குச் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

பராமரிபோ, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சூரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும். முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சவுரபா குமார் வெளியிட்டிருந்த அறிக்கையில், அரசு முறைப்பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜூன் 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை சூரினாம், செர்பியா நாடுகளுக்கு செல்கிறார் எனவும், இப்பயணத்தின் போது சூரினாம் … Read more

'துயரம் ஏற்பட்ட சமயத்தில் உலகம் இந்தியாவின் பக்கம் நின்றது' – வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

வின்ட்ஹோக், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நமீபியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக நமீபியாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். முன்னதாக நமீபியா வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர், ஒடிசாவில் நடந்த கோரமான ரெயில் விபத்தைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்களது … Read more

ஆண்கள் விடுதியில் துப்பாக்கிச்சூடு – 8 பேர் பலி

கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப்டவுன் நகரின் உமெஷி பகுதியில் ஆண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று அதிகாலை 12 பேர் மதுக்குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது மது குடித்துக்கொண்டிருந்தவர்களின் அறைக்கு சென்ற சிலர் மதுபோதையில் இருந்த அனைவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அறையில் மதுக்குடித்துக்கொண்டிருந்த 8 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க அறையில் இருந்து கீழே குதித்த 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் … Read more

மீண்டும் தென்பட்டது 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி..!

இங்கிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி மீண்டும் பார்வையில் தென்பட்டது. லண்டனில் தென்கிழக்குப் பகுதியில் முட்டைக்கோஸ் பட்டாம்பூச்சிகள் எனப்படும் இனத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் இரண்டாம் சார்லஸ் மன்னரின் காலத்தில் அரிய வகையாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1925ம் ஆண்டில் இந்தப் பட்டாம்பூச்சி வகைகள் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் தனித்துவமிக்க முட்டைக்கோஸ் பட்டாம்பூச்சிகள் குறிப்பிட்ட சில இடங்களில் பார்க்கப்பட்டதாக பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 100 ஆண்டுகளுக்குப் பின் … Read more

ஒடிசா ரெயில் விபத்து – ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இரங்கல்

நியூயார்க், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் … Read more