‘‘வெட்கக்கேடானது’’- பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணித்த தெலங்கானா முதல்வருக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்

ஹைதராபாத்: பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்காமல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்த நிலையில், அரசியல் சட்டத்தின் நெறிமுறைகளை மீறுவது கேசிஆரின் செயல் வெட்கக்கேடானது என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர ‘சமத்துவ சிலை’ திறப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை விமான நிலையம் வந்தார்.

ஆனால், பிரதமரை வரவேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமான நிலையம் வரவில்லை. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் மாநில முதல்வர் வரவேற்காமல் புறகணித்துள்ளார்.

இதுகுறித்து தெலங்கானா மாநில பாஜக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘
அரசியலமைப்பு சட்டத்தை கேசிஆர் அடிக்கடி அவமதித்து வருகிறார். இப்போது அரசியல் சட்டத்தின் நெறிமுறைகளை மீறுவது கேசிஆரின் முட்டாள்தனமான செயல். இது வெட்கக்கேடானது’’ எனக் கூறியுள்ளது.

இதுபோலவே தெலங்கானா முதல்வர் கேசிஆர் தனது பதவிப் பிரமாணத்தை மீறியிருப்பது கவலையளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

அரசியலமைப்பை மாற்றி எழுத முயலும் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் நடவடிக்கையை ஏற்க முடியாது. அனைவருக்கும் நியாயமான உரிமைகளை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை சிதைக்க சதி செய்பவர்களின் திட்டம் இது.

அரசியல் சாசனத்தை நிலைநாட்ட முதல்வர், எம்.பி.க்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தெலங்கானா முதல்வர் பதவிப் பிரமாணத்தை மீறியிருப்பது கவலையளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.