டிவிட்டரில் பெயரை இர்ஃபான் அகமதாக மாற்றிய நடிகர் விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர்
விஷ்ணு விஷால்
. தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஷ்ணு விஷாலுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’.

தொடை தெரிய… கணவருடன் மாலத்தீவில் சில்லிங் செய்யும் பிரபல தொகுப்பாளினி!

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், நடிகை ரைசா வில்சன், ரேபா மோனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. படம் ரிலீஸ் ஆகியுள்ளதை அடுத்து விஷ்ணு விஷால் டிவிட்டரில் தனது பெயரை
இர்ஃபான் அகமது
என மாற்றியுள்ளார்.

எனக்கும் அந்த மாதிரி 2, 3 சீன் வேணும்… பிரேம்ஜி ஷேர் பண்ண மீம்ஸ பாத்தீங்களா?

படத்தில் இர்ஃபான் அகமது என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால், அந்த பெயரையே தனது ஐடி யூசர் நேம்மாக வைத்துள்ளார். படத்தின் ப்ரமோஷனுக்காக விஷ்ணு விஷால் டிவிட்டர் ஹேண்டிலில் பெயரை மாற்றியுள்ளதாக தெரிகிறது.

ஜெய் ஒரு நடிகராகதான் உங்களுக்கு தெரியும்; ஜெய்க்கு இன்னொரு முகம் இருக்கு – பாலா சரவணன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.