எல்ஐசி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
எல்.ஐ.சி நிறுவனம் பல்லாண்டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவுசெய்து, அவர்களின் நன்னம்பிக்கையைச் சம்பாதித்து, தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 விழுக்காட்டை விற்பனை செய்ய ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார்மயத்தை நோக்கிய – முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும்.
இம்முடிவு மக்களின் நலனையோ எல்ஐசி நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று. ஒரு நல்லரசு என்பது நிறுவனங்களைக் கட்டியமைக்க வேண்டுமேயன்றி; தொடர் விற்பனையில் ஈடுபடுவதில் மும்முரம் காட்டக்கூடாது. முறையான யோசனையின்றி எடுக்கப்பட்ட இம்முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்று எல்.ஐ.சி. நிறுவனத்தைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.