‘அவரையும் பா.ஜ.க-வில் கொண்டுபோய் சேர்த்துடாதீங்க..!’ அமரனுக்கு அட்வைஸ் கூறிய ரசிகர்கள்

Tamil Cinema Ilayaraja Meet Gangai amaran : இந்திய சினிமாவில் இசையில் சரித்திரம் படத்தை முன்னணி இசையமைபபாளர்களில் ஒருவர் இளையராஜா. கிட்டத்தட்ட 3 தலைமுறைகளை பார்த்த இளையராஜா 1976-ம் ஆண்டு வெளியான அண்ணக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து 80 மற்றும் 90 காலகட்டத்தில் பல முன்னயி இயக்குநர்கள் மற்றும நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த இவர், இளையராஜா இசையமைத்தால் அந்த படம் வெற்றி என்ற தோற்றத்தை உருவாக்கியவர்.

இவரின் இளைய சகோதரர் கங்கை அமரனும் ஒரு இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசை மட்டுமல்லாமல், பாடல், இயக்கம் நடிப்பு என பல துறைகளில் தன்னை நிரூபித்த கங்கை அமரன் தற்போது அரசியலில் காலடி வைத்துள்ளார். பாஜகவில் இணைந்துள்ள அவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாஜகவின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டார்.

இளையராஜா கங்கை அமரன் இருவரும் சகோதரர்கள் என்றாலும் கூட கடந்த சில வருடங்களாக இவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது இந்த தகவலை பொய்யாக்கும் விதமாக கங்கை அமரன் தனது சகோதரர் இளையராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் கங்கை அமரனின் மகனும், பிரபல இயக்குநருமான வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார். கங்கை அமரன் இயக்குநராக அறிமுகமாக கோழி கூவுது முதல், கடைசியாக அவர் இயக்கிய தெம்மாங்கு பாட்டுக்கரான் வரை பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கங்கை அமரனும் தனியான மற்றும் இளையராஜாவுடன் சேர்ந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் சந்திப்பு குறித்து வெளியான புகைப்படம் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகினறனர். அதில் ஒரு ரசிகர், சார்.ஒரு விண்ணப்பம். பழக்க தோசத்துல கட்சிக்கு வாங்கணே னு கூப்புட்றாதீக.அது அவருக்கு தர்மசங்கடம் இல்லை.அது அவரின் ரசிகர்களாகிய எங்களுக்கு தர்மசங்கடம் என் பதிவிட்டு்ளளார்.

மற்றொரு ரசிகர் உங்களது திறமையும், சாதணைகளும் அளப்பரியது. கடந்த நூற்றாண்டின் குறிப்பிடதக்க இசைமேதை இளையராஜா Sir. உங்கள் நேர்காணல்களில் உங்கள் சுயசிக்கல்கள் மூலம் ராஜா Sir அவர்களை விமர்சிப்பதை தவிருங்கள். அது உங்கள் உயரத்திற்கு அழகல்ல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.