‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ ஆன்லைன் விழிப்புணர்வு: நாளை முதல் ‘பள்ளிகளில் சுகாதாரம்’ தலைப்பில் ஒளிபரப்பாகிறது

‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ எனும் இணையவழி தொடர் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் பிப்.15-ம் தேதி தொடங்கியது. இது தொடர்ந்து 5 வாரங்கள் – 5 தலைப்புகள் – 15 பகுதிகள் கொண்ட நிகழ்வுகளாக ஒளிபரப்பாக உள்ளது.

கடந்த வாரம் ஒளிபரப்பான முதல் பகுதியில், கரோனா, ஒமைக்ரான் தொற்றுகளின் தாக்கம், முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், பயணங்களின்போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள், ஒவ்வொரு பருவ காலத்திலும் பரவும் தொற்றுநோய்கள், இயற்கையான பொருட்களில் நிறைந்துள்ள சத்துகள், வயிற்றுப்போக்கு எதனால் உண்டாகிறது உள்ளிட்ட பல சுகாதார வழிகாட்டுதல்கள் ஒளிபரப்பாகின. நாளை (பிப்.21) முதல் இரண்டாம் பகுதி ‘பள்ளிகளில் சுகாதாரம்’ எனும் தலைப்பில் ஒளிபரப்பாகவுள்ளது.

அதன்படி, பிப்.21 – திங்கள் – 5-ம்பகுதியில், பள்ளியை சுத்தமாக வைத்திருத்தல், தூய்மையைக் கோருதல், 23 – புதன் – 6-ம் பகுதியில்பள்ளியில் உணவு உண்ணுதல், 25 – வெள்ளி – 7-ம் பகுதியில் சுகாதாரமான கழிப்பறை, கழிப்பறையை சுத்தமாக வைத்திருத்தல் ஆகியவை ஒளிபரப்பாக உள்ளன.

இந்த சுகாதார நிகழ்வில் டாக்டர்ராதாலெட்சுமியின் ஆலோசனைகளைத் தொடர்ந்து, ஒளிபரப்பாகவுள்ள வீடியோக்களிலிருந்து ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஒரு கேள்வி கேட்கப்படும்.

எந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் அதிகளவில் சரியான பதிலைத் தந்து பங்கேற்கிறார்களோ அந்த பள்ளிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் https://www.htamil.org/00220 என்ற லிங்க்-கில் பார்க்கலாம். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நிகழ்வு ஒளிபரப்பாகும் நாளன்று இந்த இணையவழி நிகழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் கேள்வியும் தொடர்ந்து வெளியாகவுள்ளது. அந்த கேள்விக்கான பதிலை https://www.htamil.org/ssஎன்ற லிங்க்-கில் கேட்கப்பட்டுள்ள தகவல்களுடன் பூர்த்தி செய்துஅனுப்புங்கள். மேலும், உங்களின் சந்தேகங்களையும் கேள்விகளையும் சேர்த்து அனுப்ப லாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.