பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த 113 வேட்பு மனுக்களும், ஏற்றுக் கொள்ளப்பட்டது.| Dinamalar

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த 113 வேட்பு மனுக்களும், ஏற்றுக் கொள்ளப்பட்டது.பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு வரும் 19ம் தேதி நடக்க உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, ஆளுங்கட்சியான தி.மு.க., 16 வார்டுகள், அ.தி.மு.க., 17 வார்டுகள், பா.ம.க., 7 வார்டுகள், பா.ஜ., 11 வார்டுகள், எஸ்.டி.பி.ஐ., கட்சி 6 வார்டுகள், அ.ம.மு.க., 3 வார்டுகள், மா.கம்யூ., 2 வார்டுகளிலும், வி.சி., கட்சி … Read more

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள ‛பிரீச் கேண்டி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‛வென்டிலேட்டர்' மூலம் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் … Read more

அமெரிக்க ஏவுகணைகளில் உக்ரைன் ராணுவம் பயிற்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் யவோரிவ்;ரஷ்யா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்காக, அமெரிக்கா அனுப்பிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளில் உக்ரைன் ராணுவத்தினர் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைனை, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும், ‘நேட்டோ’ அணியில் சேர்க்க ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து உக்ரைன் எல்லையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் … Read more

பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணிப்பு: தெலங்கானா முதல் மந்திரிக்கு பாஜக கண்டனம்

ஐதராபாத், பிரதமர் மோடி இன்று தெலுங்கானா மாநிலம் வருகை தந்தார். ஐதராபாத் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை வரவேற்க  தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ்  வரவில்லை.  கவர்னர்  தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்டோர் பிரதமரை  விமான நிலையத்தில் வரவேற்றனர்.  பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கு சென்று சந்திரசேகர் ராவ் வரவேற்காதது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.   எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடும் … Read more

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

ஆமதாபாத், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாட உள்ளது.  இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது. இந்த போட்டி இந்திய அணியின் ஆயிரமாவது போட்டியாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணியில் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் வலை பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி … Read more

குளிர்கால ஒலிம்பிக் போட்டி: உக்ரைன் அணியின் தொடக்க விழாவில் தூங்கிய புதின்…!

பிஜீங், சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கின. வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.  குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கவிழாவை யொட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் வண்ணமிகு வாண வேடிக்கைகடன் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை மிக உயரமான 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பலர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.  இந்தநிலையில், பெய்ஜிங் … Read more

முருங்கைக் காய்க்கு பதில் இதை ட்ரை பண்ணுங்க… ஆண்களுக்கு ஹெல்த் டிப்ஸ்!

Tamil health News Update : உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் பல நோய் தொற்றுக்கள் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இல்லறவாழ்வில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதே முதன்மை காரணமாகும். இதற்கு பல இயற்கை மருத்தவ முறையிகள் உள்ளது. அதில் முக்கியமானது பூண்டு. இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஆண்களின் கருவுறுதலை ஊக்குவிக்க பூண்டு உதவும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 18 … Read more

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ட்ரைவர்..போக்ஸோவில் கைது.!

பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சுதாகரன் என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் சுதாகரனுக்கும் அதே பகுதியில் பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற சுதாகரன் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை … Read more

தமிழகத்தில் 8 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று <!– தமிழகத்தில் 8 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது கொரோனா தொற்று –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 7ஆயிரத்து 524 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் ஆயிரத்து 223 பேருக்கும், கோவையில் மேலும் ஆயிரத்து 20 பேருக்கும், செங்கல்பட்டில் 691 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 23 ஆயிரத்து 938 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 37 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 878 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். … Read more