‘அனைவருடன் சேர்ந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ – சர்ச் கட்டுவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

மதுரை: குமரி மாவட்டத்தில் சர்ச் கட்டுவதற்கு ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு, ‘அனைவருடன் சேர்ந்த வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ என உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. குமரி மாவட்டம் மருதங்கோடு அருகேயுள்ள நெடுவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் , நெடுவிளையில் தங்கராஜ் என்பவருக்கு சர்ச் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் பிறப்பித்த … Read more

'போக்குவரத்து நெரிசலால் 3% விவாகரத்து' – கலாய்க்கப்படும் தேவேந்திர பட்னாவிஸ் மனைவியின் கருத்து

மும்பை: மும்பையில் மூன்று சதவீத விவாகரத்துக்கு காரணம் மாநிலத்தின் டிராஃபிக் மிகுந்த போக்குவரத்து என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி தெரிவித்துள்ளது, வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சிவசேனா பெண் எம்.பி ஒருவரும் அவரை கலாய்த்துள்ளார். மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ். இவர், வங்கியாளராக பணிபுரிந்துகொண்டே சினிமாவில் பாட்டு பாடுவது, அழகுக்கலைத் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார். அவ்வப்போது அரசியல் ரீதியாகவும் கருத்துகள் தெரிவித்து வருகிறார். குறிப்பாக, மகாராஷ்டிராவில் பாஜக … Read more

பெண்களின் மனநிலையை பாதிக்கும் இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் இளம்பெண்களின் மனநிலையை பாதிப்பதாக ஃபேஸ்புக் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறைகளிடத்தில் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இதைப் பயன்படுத்துபவர்களில் 40%க்கும் மேலானோர் 20 வயதுக்குக் குறைவானவர்கள். இந்த நிலையில் சமீபத்தில், ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் சார்ந்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. அந்த ஆய்வின் முடிவுகள்தான் தற்போது இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்த கேள்வியை அதிகரித்துள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் இளம்பெண்கள் தங்களின் உடல், அழகு, தோற்றம் … Read more

இனி டிஜிட்டல் விவசாயம்தான்.. பிரதமர் மோடி அழைப்பு!

வறுமையில் இருந்து ஏராளமான மக்களை வெளியேற்றி அவர்களின் வாழ்வை மேம்பட செய்யும் திறன் விவசாயத்துக்கு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “டிஜிட்டல் விவசாயம்தான் இந்தியாவின் எதிர்காலம். இளைஞர்கள் இதற்கு பெருமளவில் பங்களிக்கலாம். அமிர்த காலத்தில் விவசாயத்தின் வளர்ச்சி மூலம் அனைவருக்குமான வளர்ச்சி மீது இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. விவசாயத்தில் பெண்களுக்கு சுய … Read more

13 ஆம் திருத்த சட்டம் தேவை தானா?

Courtesy: கட்டுரையாசிரியர் – தி. திபாகரன் இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சினை கிடையாது. தமிழர்களுடைய பிரச்சினை பொருளாதார பிரச்சினை மட்டும்தான். அதனை வருகின்ற புதிய அரசியல் யாப்பின் ஊடாக உறுதி செய்து பொருளாதாரப் பிரச்சினையை தீர்த்து விடுவோம்” என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராசபக்ச அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். இதிலிருந்து இலங்கை அரசாங்கம் 13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்பது புலனாகிறது. அந்த அடிப்படையில் இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தினால் இலங்கை … Read more

மெட்டா நிறுவன பங்குகள் வீழ்ச்சி – உலக பணக்காரர்கள் பட்டியலில் 13-வது இடத்துக்கு இறங்கிய மார்க் ஜக்கர்பெர்க்! <!– மெட்டா நிறுவன பங்குகள் வீழ்ச்சி – உலக பணக்காரர்கள் பட்டிய… –>

மெட்டா நிறுவன பங்குகள் தொடர் விலை வீழ்ச்சியால் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் வரிசையில் 13-வது இடத்தை பிடித்தார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயனர்கள் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை 26 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதனால் 82 புள்ளி 5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மார்க் ஜக்கர்பெக் 13-வது இடத்திற்கு பின்தங்கினார். 91 புள்ளி 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் … Read more

மனைவியர் விற்பனைக்கு களவானித்தனம் செய்த மாடர்ன் காதல் தம்பதியர்.. திகைத்து நிற்கும் போலீஸ்.! <!– மனைவியர் விற்பனைக்கு களவானித்தனம் செய்த மாடர்ன் காதல் தம்… –>

பெங்களூரில் டுவிட்டர் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் தனியாக குழு தொடங்கி, மனைவியரை மாற்றிக் கொள்ளும் வைப் ஸ்வாப்பிங் விபரீதத்தில் ஈடுபட்ட காதல் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். அற்ப ஆசைக்காக மனைவியை கடைபொருளாக்கிவர்கள் கூண்டோடு சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… சில மாதங்களுக்கு முன்பு கேரள மா நிலம் கோட்டயம் சங்கனேச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதள குழுக்கள் மூலமாக மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவுடன் தொடர்பில் … Read more

சிறுவன் Rayan உயிரிழப்பு.., கடும் துயரத்தில் மொராக்கோ..

மொராக்கோவில் கிட்டத்தட்ட 5 நாட்களாக 104 அடியில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருந்த ஐந்து வயது சிறுவன் Rayanசடலமாக மட்கப்பட்டதால் நாடே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மொராக்கோவின் Chefchaouen மாநிலத்தில் உள்ள ஹிக்ரான் கிராமத்தை சேர்ந்த Rayan என்ற 5 வயது சிறுவன் கடந்த 1-ஆம் திகதி (செவ்வாய்கிழமை) மாலையில் 100 அடி (32 மீற்றர்) ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். அதனைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவும் பகலும் சிறுவனை மீட்கும்பணி நடந்தது. … Read more

நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள்! மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்  என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த  மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இன்றைய மக்களை அமர்வின்போது, சுகாதார கட்டமைப்பு மேம்பாடு குறித்து உறுப்பினர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் பதில் அளித்தார். அப்போது, சுகாதார கட்டமைப்பு மேம்பாடு உயர்த்தப்பட்டு வருவதாகவும்,  நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காக  மருத்துவக்கல்லூரிகள் … Read more

ஜூனியர் உலக கோப்பையை 5வது முறை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரொக்கப் பரிசு

19 வயதுக்குட்பட்டோருக்கான  உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரூ.40 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சிறிய டோக்கன் முறையிலான பாராட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஜூனியன் அணி ஐந்தாவது முறை சாம்பியன் பட்டம் வென்றவுடன் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, வீரர்கள் மற்றும் துணைப்பணியாளர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தார்.  இது … Read more