நேபாளத்தில் புதுமணத் தம்பதியுடன் சென்ற ஜீப் மலைப்பாங்கான சாலையில் சறுக்கி கவிழ்ந்து விபத்து.. 8 பேர் பலி.! <!– நேபாளத்தில் புதுமணத் தம்பதியுடன் சென்ற ஜீப் மலைப்பாங்கான … –>

நேபாளத்தில் உள்ள பியூதான் மாவட்டத்தில் புதுமணத் தம்பதியுடன் சென்ற ஜீப் ஒன்று, மலைப்பாங்கான சாலையில் சறுக்கி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மணமக்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். புதுமண தம்பதியையும் அவர்களது உறவினர்களையும் ஏற்றிக் கொண்டு லுங் பகுதியில் இருந்து கௌமுகி கிராமப்புற நகராட்சியின் லிபாங் நோக்கிச் சென்ற போது, ஜீப் சறுக்கி சுமார் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்து நேரிட்டது. இதில் சம்பவ இடத்திலேயெ 6 பேர் உயிரிழந்ததாகவும் 2 … Read more

`தூங்கவனம்', விஸ்வரூபம்'ல டப்பிங் ஆர்டிஸ்ட்; இப்போ, கமல் சாரோட பாராட்டு நெகிழும் மணிகண்டன்!

விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், மணிகண்டன், அபிஹாசன், ரித்விகா, கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நாசர் நடித்திருக்கும் திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையில் வெளியானது. மாறுப்பட்ட கதையம்சம் கொண்ட இப்படத்தை சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் பார்த்துவிட்டு படக்குழுவைப் பாராட்டினார். அதுகுறித்து நடிகர் மணிகண்டனிடம் பேசினேன். மணிகண்டன் ” ராஜ்கமல் புரொடக்‌ஷன்ஸ்ல இருந்து போன் பண்ணுனாங்க. கமல் சார் பார்க்க விரும்புறதா சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா போய் பார்த்தோம். இதுக்கு முன்னால் … Read more

உலகின் இரண்டாவது பெரிய சிலை: தெலுங்கானாவில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் முச்சிந்தலாவில் அமைக்கப்பட்டுள்ள  216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைத்தார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர் பகுதியான ஷம்ஷாபாதில் ரூ.1,000 கோடி செலவில் பஞ்சலோகத்திலான பிரமாண்டமான ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஜீயர் அறக்கட்டளையால் ஐதராபாத்தில் உள்ள சம்ஷாபாத்தில் உள்ள ஸ்ரீராம் நகரில் உள்ள ஜீவா ஆஸ்ரமத்திற்கு அருகில் ராமாநுஜரின் 1,000-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த சிலை உருவாக்கப்பட்டு உள்ளது. 45 ஏக்கர் … Read more

2016 ஐ.பி.எல்.தொடரில் கேப்டனாக பட்டம் வெல்லாதது ஏமாற்றம் அளித்தது – விராட் கோலி கருத்து

2016ம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மோதின. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தலைவராக இருந்த விராட் கோலி தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: அது இன்னும் வலிக்கிறது. அந்த நாளில் நாங்கள் போதுமானதாக விளையாடவில்லை. அது ஒரு விளையாட்டு என்று நான் நினைக்கிறேன், … Read more

லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு

அபுதாபி: கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த லீனா ஜலால், அபுதாபியில் மனித வள வல்லுநராக பணிபுரிந்து வருகிறார். அங்குள்ள பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை அவர் வாங்கியிருந்தார்.வாராந்திர குலுக்கல் முறையில் பிப்ரவரி 3 ஆம் தேதி அந்த டிக்கெட்டிற்கு பரிசு கிடைத்தது.  பத்து பேருடன் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி லீனா ஜலாலுக்கு, 22 மில்லியன் திர்ஹம் பரிசு தொகை கிடைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.44 கோடியே 75 லட்சம் ரூபாய் … Read more

முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பிப்.12ம் தேதி தொடங்க உள்ள தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி நீட் தேர்வில் சாதித்த டீ விற்கும் இளைஞன்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சீட்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் டீ விற்கும் இளைஞர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளான்.  அசாம் மாநிலம், பஜாலி மாவட்டம், பட்டசர்குர்சி சவுக் பகுதியில் வசிப்பவர் ராகுல்தாஸ் (24). இவரது தந்தை 11 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டு சென்று விட்டார். 2 பிள்ளைகளுடன் வறுமையில் சிக்கி திணறிய ராகுலின் தாய், டீ கடை நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வந்தார். வறுமை காரணமாக ராகுல் 12ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டார்.பின்னர், தாய்க்கு உதவியாக டீ … Read more

இந்தியாவின் முதல் விர்ச்சுவல் திரைப்படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்

இந்திய சினிமாவில் அவ்வப்போது திரைப்படங்களை உருவாக்குவதில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் என்கிற படம் முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் தயாரானது. அதேபோல தற்போது விர்ச்சுவல் முறையில் ஒரு படம் முழுவதும் தயாராக இருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக இப்படி விர்ச்சுவல் முறையில் தயாராகும் படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் நடிக்கிறார். மலையாளத்தில் உருவானாலும் பான் இந்தியா படமாக ஹிந்தி மற்றும் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் ஒரே … Read more

ஐ.நா., வில் இந்தியா வலியுறுத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்-‘மத வன்முறைக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என, ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. நேற்று சர்வதேச மனித சகோதரத்துவ நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஐ.நா.,வில் நடந்த கூட்டத்தில், இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசியதாவது:தற்போது மதங்களுக்கு எதிராக புதிய அச்சம் தலைதுாக்கியுள்ளது. குறிப்பாக ஹிந்து, பவுத்தம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றன. இந்த அச்சுறுத்தல்களை ஐ.நா., கவனத்தில் கொள்ள … Read more

கர்நாடக அரசு அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

பெங்களூரு, கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக கர்நாடக அரசின் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை மற்றும் கர்நாடக மாநில கிராம வாழ்வாதார மேம்பாட்டுத்துறை மற்றும் அமேசான் நிறுவனம் இடையே ஒப்பந்தம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில்  கையெழுத்தானது. இதில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:- தற்போதைய சூழலில் ஏழ்மை நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது, கிராமப்புற மக்களை மேம்படுத்துவது மட்டுமல்லாது வறுமையையும் ஒழிக்க வேண்டும். ஏழை மக்களுக்கு … Read more