மார்ச் 8 அன்று சாம்சங் கேலக்ஸி F23 5g போன் அறிமுகம் – விலை மற்றும் அம்சங்கள்!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தனது எஸ் ரக பிளாக்‌ஷிப் தொகுப்பான சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும், கேலக்ஸி எஸ்8 சீரிஸ் டேப்லெட்டுகளையும் அறிமுகம் செய்தது.

அதனைத் தொடர்ந்து, தற்போது மிட் ரேஞ் பயனர்களுக்காக புதிய 5ஜி போனை சந்தைக்குக் கொண்டு வருகிறது. சாம்சங் கேலக்ஸி F23 என பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்மார்ட்போன், மார்ச் 8ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F23 5G specifications)

இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட எச்டி+ டிஸ்ப்ளே கொடுக்கப்படுகிறது. இந்த திரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. அமோலெட் பேனலா அல்லது எல்சிடி பேனலா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

Apple Event 2022: iPhone SE 3, M2 சிப்கள் அறிமுகமாவதாகத் தகவல் – நேரலையில் காண வாய்ப்பு!

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தின் அடிப்படையில் ஒன் யுஐ 4 (One UI 4) ஸ்கின் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், ஆண்ட்ராய்டு 14 வரையிலான அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் என்ற உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 750ஜி 5ஜி (Snapdragon 750G) சிப், இரண்டு கோர்டெக்ஸ்-ஏ77 சிபியு கோர்கள் 2.2ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் ஆறு கார்டெக்ஸ் ஏ55 சிபியு கோர்கள் 1.8ஜிகாஹெர்ட்ஸ், அட்ரினோ 619 ஜிபியுவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி கேமரா (Samsung Galaxy F23 5G camera)

இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் கொண்ட டிரிப்பிள் ரியர் அமைப்பு உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

Flipkart Sale: மக்களே; வெறும் ரூ.4,199க்கு சாம்சங் 5ஜி போன் – இந்த வாய்ப்ப நழுவ விட்றாதீங்க!

செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 13 மெகாபிக்சல் கேமரா முன்பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த கேமரா முன் பக்கம் உள்ள வாட்டர் டிராப் நாட்சில் பொருத்தப்பட்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி பேட்டரி (Samsung Galaxy F23 5G battery)

இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு டைப்-சி போர்ட் ஆதரவாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் 64ஜிபி, 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி தேர்வுகளில் வெளியாகும் என்று கருதப்படுகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.20,000க்கும் குறைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இது போனா… இல்ல சினிமா கேமராவா… 40MP செல்பி, 2 டெலிபோட்டோ லென்ஸுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா!

பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் வாயிலாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 8ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இது குறித்த டீசரையும் Flipkart Shopping தளம் வாடிக்கையாளர்களுக்காகக் காட்சிப்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.