காமெடி நடிகரான நடன இயக்குனர்

காமெடி நடிகரான நடன இயக்குனர்

காமெடி நடிகரான நடன இயக்குனர்

3/6/2022 7:11:17 PM

பல்வேறு  படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட். அவர் ஒரு நடிகராகச் சில படங்களில் நடித்துள்ளார் இப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் முற்றிலும் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் ‘டிங் டாங்’.
இப்படத்தை நடன இயக்குநரும் ராபர்ட்டின் சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நான்கு கதாநாயகர்களும் நான்கு கதாநாயகிகளும் நடிக்கிறார்கள்.  அவர்களுடன் நடன இயக்குநர் ராபர்ட் முக்கியமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி படத்தின் இயக்குநர் ஜே.எம் கூறியதாவது: நானும் எனது சகோதரர் ராபர்ட்டும்  மாஸ்டர் பிரபு தேவா அவர்களின் தீவிரமான ரசிகர்கள் மட்டுமல்ல அவரது மாணவர்களும் கூட. எனது இயக்கத்தில் ஏற்கெனவே ‘ஒண்டிக்கு ஒண்டி ‘ என்ற படம் வெளியாகி உள்ளது .இரண்டாவது படமாக  ‘டிங் டாங் ‘உருவாகிறது.டிங் டாங் என்றாலே கடிகாரம் என்பது அனைவருக்கும் நினைவில் வரும். அதுபோல் தான் இப்படத்தின் கதையும் காலத்தினை முக்கியமான மையமாக வைத்து உருவாகிறது.
இந்தப் படம் ஒரு வித்தியாசமான திரில்லர் படமாக இருக்கும்.படத்தில் என் சகோதரர் ராபர்ட் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.