"சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமை ஆக்க வேண்டும்" – முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் கோரிக்கை

காசி விசுவநாதர் கோயில்போல சிதம்பரம் நடராஜர் கோயிலை நாட்டுடமை ஆக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வி.வி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவர்களுக்கு இக்கோவிலில் உரிமை இல்லை என்றும், கோவில் இருக்கக்கூடிய சொத்துக்களை அவர்களே கவனித்து வருவதாகவும், அதனை அரசு தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .
Chidambaram Bhagwan Nataraja Temple, Tamil Nadu
மேலும், அங்கு பூஜைகளை தமிழில் நடத்த வேண்டும் என்றும், சமஸ்கிருதத்தில் நடத்தக்கூடாது என்றும் தெரிவித்தார். பிரதமர் மோடி அவர்கள் காசி விஸ்வநாதர் கோயிலை அரசுடைமை ஆக்கியது போல் தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசுடமையாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த கோவிலை அரசுடைமை ஆக்கும் முயற்சியில் இந்து சமய அறநிலைத் துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் ஈடுபட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் கேட்டுக் கொண்டார். மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இந்த கோவிலில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர், இதற்கு அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் , நீதிமன்றம், மொழி உரிமை அனைத்தையும் பார்க்கும் பொழுது சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில்தான் பூஜைகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.