தருமபுரியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டக்கல் கண்டுபிடிப்பு

பென்னாகரம் அருகே நரசிபுரம் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மஞ்சநாயக்கனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நரசிபுரத்தில் உள்ள கரடு பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால வட்டக்கல் எனப்படும் (கல் வட்டங்கள்) ஈமச் சின்னங்களை புதுபட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள வட்டக்கல் மற்றும் ஈமச் சின்னங்களை முழுமையாக ஆய்வு செய்யும்பொழுது அந்தகால மனிதர்களின் வாழ்க்கைமுறை குறித்த வரலாற்றுச் சுவடுகளைக் கண்டறிய முடியும்.
image
image
image
மேலும் தருமபுரி மாவட்டத்தில் பங்குநத்தம் பகுதியில் இதேபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட வட்டக்கல் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நரசிபுரத்தில் தற்போது 50க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருக்கின்றன. பல கல்வட்டங்கள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருகிறது. ஒருசில இடங்களில் சமூக விரோதிகள் சிலர் புதையல்கள் இருக்கும் என்ற நோக்கத்தில் கல்வட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பள்ளம் தோண்டியுள்ளனர்.
image
image
இதுபோல் தொடர்ந்து பண்டைய பெருங்கற்கால ஈமச் சின்னங்களும் வட்டக்கல் சுவடுகள் அனைத்தும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக தொல்லியல் துறையும் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து நரசிபுரம் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.