தனுஷின் 'மாறன்' படம் எப்படி இருக்கு.?: ட்விட்டரில் சுட சுட வெளியான விமர்சனம்..!

கார்த்திக் நரேன்
இயக்கத்தில்
தனுஷ்
நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘
மாறன்
‘. அண்மையில் வெளியான ‘மாறன்’ படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் நேற்று மாலை ஐந்து மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் குறித்து பலவிதமான எதிர்மறை விமர்சனங்கள் இணையத்தில் குவிந்து வருகிறது.

நடிகர் தனுஷ்,
மாளவிகா மோகனன்
நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ‘மாறன்’ படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

நேர்மையான பத்திரிக்கையாளராக இருந்து குழந்தைகளின் இறப்பிற்கு காரணமானவர்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்ததால் தனுஷின் அப்பாவான ராம்கியை கொன்று விடுகின்றனர். இரண்டாவது பிரசவத்தின்போது தனுஷின் அம்மாவும் இறந்து விடுகிறார். பின்பு தன் தங்கையை தானே வளர்க்கிறார் தனுஷ். அப்பாவைப் போலவே தனுசும் நேர்மையான பத்திரிகையாளராக இருக்கிறார்.

மஞ்சிமா மோகனுடனான காதலை உறுதி செய்த வாரிசு நடிகர்: விரைவில் டும் டும் டும்..!

இதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தனுஷ் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதே ‘மாறன்’ படத்தின் கதை. கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத அதர பழசான ஒரு கதையை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளையும் முன்கூட்டியே கணிக்கும் அளவிற்கு உள்ளதாக ரசிகர்கள் ட்விட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“Radhe Shyam” படம் எப்படி இருக்கு ?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.