கரக உற்சவங்களுக்கு நிதியுதவி| Dinamalar

பெங்களூரு-”பெங்களூரு உட்பட பழைய மைசூரு பகுதியில் நடக்கும் கரக உற்சவங்களுக்கு, மாநில அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும்,” என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் தெரிவித்தார்.சட்ட மேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:காங்., — ரமேஷ்: சம்பிரதாயப்படி மக்கள் கொண்டாடும், கரக உற்சவங்களுக்கு, முந்தைய சித்தராமையா அரசு, நிதியுதவி வழங்கியது. இம்முறை பட்ஜெட்டில் நிதியுதவி ஒதுக்கவில்லை. ஜாதி வேறுபாடின்றி, அனைத்து மக்களும் உற்சவத்தில் பங்கேற்கின்றனர். மாநிலத்தின் 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், 147 இடங்களில் கரக உற்சவம் நடக்கிறது. இவைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.பா.ஜ., — விஸ்வநாத்: கெங்கல் ஹனுமந்தையா, கன்னடம், கலாச்சாரத்துறையை துவங்கினார். வீரப்ப மொய்லி காலத்தில், இயக்குனரகம் உருவாக்கப்பட்டது. நான் அப்போது, அத்துறையை நிர்வகித்தேன். தற்போது துறையின் நிதி, கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கு பதில், வேறு நோக்கங்களுக்கு செலவாகிறது. மேளம் தட்டுவோர் உட்பட கலாச்சாரத்தை பாதுகாக்கும் அனைவருக்கும், அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.அமைச்சர் கோவிந்த் கார்ஜோள்: குலத்தொழிலை நம்பி வாழும் சமுதாயத்தினரே, கலாச்சாரத்தை பாதுகாக்கின்றனர். 2008 முதல் 2013 வரை, கன்னடம், கலாச்சாரத்துறையை நிர்வகித்துள்ளேன். 21ம் நுாற்றாண்டின் கலைகள் நசிவடைந்துள்ளன.நான் அமைச்சராக இருந்த போது, பீதரில் உலக கிராமிய மேளா நடத்தினோம்.கடந்த 2011ல் பெலகாவியில், உலக கன்னட மேளா நடத்தினோம். எலக்ட்ரானிக் மற்றும் காட்சி ஊடகங்களால், மாநிலத்தின் 75 நாடக நிறுவனங்களில், பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளது. 25 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இவற்றை நிர்வகிக்க, ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வழங்கும்படி, நான் இத்துறை அமைச்சராக இருந்த போது உத்தரவிட்டேன். இப்போதும் அது தொடர்கிறது.கரகம் நடத்த, பெங்களூருக்கு 66 லட்சம் ரூபாய், ரூரலுக்கு 23 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பழைய மைசூரு பகுதிகளான துமகூரு, மைசூரு, மாண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர், ஹாசன், பெங்களூரு நகர், ரூரல், கித்துார் – கர்நாடகாவின், ஹாவேரியில் கரக உற்சவம் நடக்கிறது. இவைகளுக்கு அரசு நிதியுதவி வழங்கும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.