சிம்பு பற்றி என்ன பேசினார் அனிதா சம்பத்? பிக்பாஸ் சர்ச்சை

Bigg Boss Ultimate: Anitha comment on Simbu goes controversy: பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்பு குறித்து, அனிதா சம்பத் பேசியது சிம்பு ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால், குறுகிய காலத்திலே 5 சீசன்கள் முடிவடைந்துவிட்டன. இருந்தாலும் பிக் பாஸ் ரசிகர்கலை குஷிப்படுத்த, விஜய் டிவி பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது. இதில் கடந்த சீசன்களில் கலந்துக் கொண்ட போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக, சினேகன், சுஜா, ஜூலி, ஷாரிக், தாடி பாலாஜி, அபிராமி, வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபினய் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி 45 நாட்களை எட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, வனிதா, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர். வைல்டு கார்டு வாய்ப்பாக மீண்டும் சுரேஷ், சதீஷ், ரம்யா பாண்டியன் ஆகியோர் உள்ளே வந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: 3 வித ஆடை… 3 வித ஹேர் ஸ்டைல்… அசத்தலான நடனம்… வைரலாகும் பழைய கண்ணம்மா

இதனிடையே பிக் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், விக்ரம் படப்பிடிப்பு இருப்பதாக கூறி விலகினார். தற்போது சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கமலைப் போல சிம்பு சிறப்பாக தொகுத்து வழங்கி வருவதாக பலர் அவரை பாராட்டி வருகிறார். முதல் வாரத்தில் அன்பாக பேசிய சிம்பு, அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்டதால் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், சிம்பு குறித்து அனிதா பிக் பாஸ் வீட்டில் பேசி சிம்பு ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. சுருதியிடம் பேசிக்கொண்டிருந்த அனிதா, நீ பேசுனது ரொம்ப ஆழமான விஷயம். இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது. அவர் அதுபற்றி யோசிக்கவும் மாட்டார். ஏன்னா அவர் பிக்பாஸுக்கு புதுசு. கமல் சாருக்கு இதெல்லாம் புரிஞ்சிருக்கும். ஏன்னா கமல் சார் இதெல்லாம் 5 சீசனனா பார்த்துக்கிட்டே இருக்கார், என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து கடுப்பான சிம்பு ரசிகர்கள் வரும் வாரத்தில் அனிதாவை வெளியேற்ற வேண்டும் என்று அனிதாவுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.