சிறந்த தமிழ் அறிஞரும், இயற்றமிழ், இசைத்தமிழில் வல்லவருமான இரா.திருமுருகன் பிறந்த தினம்.!!

முனைவர் இரா.திருமுருகன் :

சிறந்த தமிழ் அறிஞரும், இயற்றமிழ், இசைத்தமிழில் வல்லவருமான முனைவர் இரா.திருமுருகன் 1929ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்ற ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ் மீதான பற்றால் தன் பெயரை திருமுருகன் என மாற்றிக்கொண்டார். 

தமிழ் வளர்ச்சிக்காகவே பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். புதுவையில் தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் கட்டாயம் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று குரல் கொடுத்தார் இவர்.

தமிழுக்கு புதிய இலக்கணம் உருவாக்குவதிலும், இசைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும் ஈடுபட்டார். இலக்கணச்சுடர், இயல்இசை செம்மல், முத்தமிழ் சான்றோர், நல்லாசிரியர், மொழிப்போர் மறவர், பாவலர் அரிமா, கலைச்செல்வம் உள்ளிட்ட பல விருதுகள் மற்றும் பட்டங்களை பெற்றுள்ளார்.

இலக்கணக் கடல் எனப் புகழப்பட்டவர். இவர் 55 வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவரது 40 ஆண்டுகால தமிழ்ப் பணிகள், தமிழியக்கம் என்ற பெயரில் வெளியான நூல்களில் இடம்பெற்றுள்ளன.

தமிழ் வளர்ச்சி, தமிழர் நலனுக்காகவே இறுதிவரை பணியாற்றிய இரா.திருமுருகன் 2009ஆம் ஆண்டு மறைந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.