சுரேஷ் நாராயணனின் சம்பளம் ரூ.18 கோடியாக உயர்வு.. யார் இவர் தெரியுமா..?!

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்கு எப்போதும் அதிகப்படியான சம்பளம் அளிக்கப்பட்டாலும், கடந்த சில வருடங்களாகச் சந்தையில் போட்டி மிகவும் அதிகமாகி வரும் நிலையில் வருமானத்திற்கு இணையாக அதிகப்படியான போன்ஸ் தொகையும், போட்டி நிறுவனங்களுக்கு இணையான சம்பளத்தையும் அளிக்கப்படும் காரணத்தால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இணையாகச் சம்பள அளவுகள் இந்தியாவிலும் உயர்ந்துள்ளது.

இதன் வாயிலாகச் சுரேஷ் நாராயணனின் சம்பளம் 18 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

ஏர் இந்தியா-வின் புதிய சேர்மன்.. என்.சந்திரசேகரனுக்கு வந்த புதிய பொறுப்பு..!

சுரேஷ் நாராயணன்

சுரேஷ் நாராயணன்

இந்தியாவின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநர் தான் சுரேஷ் நாராயணன். இவர் 2008ஆம் ஆண்டில் இருந்து நெஸ்லே நிறுவனத்தில் பல வர்த்தகச் சந்தையில் பல முக்கியப் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

நெஸ்லே இந்தியா

நெஸ்லே இந்தியா

குறிப்பாகச் சிங்கப்பூர், ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் வர்த்தகச் சந்தையில் முக்கியப் பதவிகளில் பணியாற்றிய நெஸ்லே 2015 ஆகஸ்ட் மாதம் நெஸ்லே இந்தியா வர்த்தகத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் பணியாற்றி வருகிறார். சுரேஷ் நாராயணன் தலைமையில் நெஸ்லே இந்தியா தொடர்ந்து மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

18.8 கோடி ரூபாய் சம்பளம்
 

18.8 கோடி ரூபாய் சம்பளம்

இந்நிலையில் சுரேஷ் நாராயணனின் சம்பளம் 2020ஆம் ஆண்டில் 17.19 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் 9.3 சதவீதம் உயர்ந்து 18.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நெஸ்லே இந்தியா ஜனவரி-டிசம்பர் நிதியாண்டைப் பின்பற்றுகிறது, இதனால் கடந்த ஆண்டுக்கான நிறுவனத்தின் வருவாய் அளவீடுகளைக் கணக்கிட்டு சம்பள அளவீடுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

9.3 சதவீதம் உயர்வு

9.3 சதவீதம் உயர்வு

2019 ஆம் ஆண்டில் சுரேஷ் நாராயணன்16.17 கோடி ரூபாய் பெற்ற நிலையில் கடந்த ஆண்டு 6.3 சதவீதம் வரையில் உயர்ந்து 17.19 கோடி ரூபாய் சம்பளத்தைப் பெற்றார். ஆனால் 2021ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 9.3 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

அதிக சம்பளம் வாங்கும் FMCG சிஇஓ

அதிக சம்பளம் வாங்கும் FMCG சிஇஓ

2020 சம்பள உயர்வின் படி சுரேஷ் நாராயணன் ஹிந்துஸ்தான் யூனிலீவர் சஞ்சீவ் மேத்தாவை பின்னுக்குத் தள்ளி அதிக சம்பளம் வாங்கும் FMCG சிஇஓவாக உயர்ந்தார். 2020 நிதியாண்டில் ரூ.19.42 கோடியாக இருந்த யூனிலீவர் சஞ்சீவ் மேத்தாவின் சம்பளம் 2021ல் 21 சதவீதம் சரிந்து ரூ.15.4 கோடியாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Nestle India CMD Suresh Narayanan drew over Rs 18 crore salary in 2021

Nestle India CMD Suresh Narayanan drew over Rs 18 crore salary in 2021 சுரேஷ் நாராயணனின் சம்பளம் ரூ.18 கோடியாக உயர்வு.. யார் இவர் தெரியுமா..?!

Story first published: Wednesday, March 16, 2022, 19:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.