நீட்டுக்காக தென்னிந்தியாவின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக மாற்றிடக்கூடாது #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 15-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக `ஆளுநருடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பும்… டி.ஆர்.பாலுவின் ஆளுநர் மாற்றக் கோரிக்கையும்… அடுத்தது என்ன?’  எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
BabuMohamed
ஏதோ ஒரு சிக்கலான விஷயத்துக்காக முதல்வர் ஆளுநர் சந்திப்பு…. அதைசரி பண்ண டிஆர்பாலு… ஒருஆக்சன்.. ..!”
Nellai D Muthuselvam
தற்போதைய சுழ்நிலையில் நீட் விலக்குக்கு தமிழக அரசு முயற்சிப்பதை சற்று நிறுத்த வேண்டும். தமிழக அரசின் நீட் விலக்கு ,கர்நாடக மேகதாது அணை கட்ட பட்ஜெட் ஒப்புதல் , முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி ஆகியவை தொடர்பான மசோதாவும் ஜனாதிபதி பார்வைக்கு வைக்கப்பட்டால் தென் மாவட்ட மக்கள் நிலைமை பரிதாபமாக மாறிவிடும். மாநில உரிமையை வைத்து நமக்கு எதிராக காய்கள் நகர்த்த வாய்ப்புகள் உள்ளது. நீட்க்காக தென்னிந்திய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக மாற்றி விடக் கூடாது.
நாம் மாநில சட்ட பேரவை உரிமை , அதிகாரம் போன்றவற்றை முன்னிறுத்தினால் அவர்களும் முன்னிறுத்துவார்கள் என்பதை மறந்து விட்டார்களா தமிழக ஆட்சியாளர்கள். நீட் தேசிய பிரச்சனையாக மாறும் வரை அதற்கு விலக்கு வராது.
image
ஆனந்த்
நீட்டை நிராகரித்து தமிழ்நாடு அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டும்.
Advice Avvaiyar
முதல்வர் சொல்ல வேண்டியதை நேரிலேயே சொல்லி விட்டார். கவர்னர் மாற்றக் கோரிக்கை நிறைவேறுவது கடினம் தான். இப்ப தானே புது கவர்னர் வந்து இருக்கிறார்?நாம் விரும்பும் மாற்றம் வருவது நம் கையில் இல்லை என்பது தான் நிதர்சனம். மாற்றம் வரும் வரை காத்திருக்க வேண்டியது தான். வேறு வழி இல்லை.

Narayanan anantharam

என்ன? கவர்னர் இருப்பார் .நீட் தேர்வு விலக்கு ஜனாதிபதி நிராகரிப்பார். திரும்ப தீர்மானம்.,
அடுத்த தேர்தல் வரும். மக்கள் நீட் தேர்வுடன் ஹிந்தியும் கற்பர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.