ராபர்ட்சன் பேட்டையில் இலவச மருத்துவ முகாம்| Dinamalar

தங்கவயல்:ராபர்ட்சன்பேட்டையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

நடிகர் புனித் ராஜ்குமார் பிறந்தநாளை ஒட்டி அவரின் பெயரில் உள்ள சமூக, கலாசார, கல்வி, விளையாட்டு அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.தேவராஜ் அர்ஸ் மருத்துவக் கல்லுாரி, இருதாலயா மருத்துவமனை டாக்டர்கள் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், சாதாரண காய்ச்சல் தலைவலி, மூட்டு வலி, எலும்பு, கண், காது, மூக்கு, தொண்டை ஆகிய நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்பட்டது.மொய்து பாலி கிளினிக் சார்பில், கமல் முனிசாமி இலவச மருந்து மாத்திரைகள் வழங்கினார். 300க்கும் மேற்பட்டோர் இலவச மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.