தமிழகத்தில் இன்று 37 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 20 பேர்: 64 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,52,751. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,51,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,14,387.

இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை.

சென்னையில் 20 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 25 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 267 தனியார் ஆய்வகங்கள் என 336 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 339.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 6,43,61,415.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை: 25,084.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 34,52,751.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 37.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 20.

* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 129.

* தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 21 பேர். பெண்கள் 16 பேர். மூன்றாம் பாலினத்தவர் யாருமில்லை.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 64 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 34,13,387 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 9068 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மாநிலம் முழுவதும் 38986 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24679 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 9287 ஐசியூ படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.