இந்தியாவில் புதிதாக 8,013 பேருக்கு கொரோனா பாதிப்பு <!– இந்தியாவில் புதிதாக 8,013 பேருக்கு கொரோனா பாதிப்பு –>

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து, 8 ஆயிரத்து 13 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 119 பேர் உயிரிழந்த நிலையில், 16 ஆயிரத்து 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 1 புள்ளி 11 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 1 லட்சத்து 2 ஆயிரத்து 601 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். Source link

உக்ரைனுக்கு உதவி., ரஷ்யாவுக்கு தடை: கனடா அதிரடி நடவடிக்கை!

கனடா உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை வழங்கவுள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்கிறது. ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்பதற்காக கனடா, உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் (anti-tank weapons) மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை வழங்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைனின் வீரமிக்க பாதுகாப்புக்கு கனடா … Read more

என் ரத்தம் தமிழக மண்ணில் கலந்துள்ளது : ராகுல் காந்தி நெகிழ்ச்சி

சென்னை தமது ரத்தம் தமிழக மண்ணில் கலந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்னும் தன் வரலாற்று நூல் முதல் பாகம் வெளியிடப்பட்டது.  இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகத்தைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.  முதல் பிரதியைத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். விழாவில் சிறப்பு … Read more

ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் – ரஷியாவிற்கு ஐ.நா.சபை வலியுறுத்தல்

ஜெனீவா: உக்ரைன் ரஷியா இடையேயான போர் 5-வது நாளாக தொடரும் நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அவசர கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கியது. இதில் பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ்,  உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். போர் நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள் பலியாவதாகவும், இதனால் ரஷிய ராணுவ வீரர்கள் திருப்பி செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் … Read more

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றத்திற்கு உதவும் அண்டை நாடுகள் – பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்

புதுடெல்லி: போர் பதற்றம் நிலவி வரும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள், மீட்டு, தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியர்கள் வெளியேற்றத்திற்கு உதவி வருகின்றன. இந்நிலையில், இந்தியர்களுக்கு உதவி செய்யும் உக்ரைனை ஒட்டி அமைந்துள்ள அண்டை நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ருமேனியா பிரதமர்  நிக்கோலே சியூகாவுடன் தொலைபேசி மூலம் … Read more

உக்ரைன்-ரஷியா போர் எதிரொலி: 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்

புடாபெஸ்ட்: உக்ரைன் மீது ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷிய தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. போர் பீதியால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐநா சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.  போர் தீவிரமடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  உக்ரைனில் இருந்து வெளியேறுவோர், போலந்து, … Read more

மார்ச்.01: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பாலியல் தொழிலாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கொரோனோ ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வாக்காளர் அட்டை உட்பட அனைத்து ஆவணங்களும் வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்படிருந்தது.இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுக்க வேண்டும். … Read more

கிரைம் கார்னர்| Dinamalar

நீரில் மூழ்கி இருவர்கள் பலி துமகூரு சிரா, எம்.தாசரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கங்கராஜு, 27, இவரது தம்பி ஹனுமந்தராஜு, 21, நேற்று காலை, மாடுகளை குளிப்பாட்ட ஏரிக்கு சென்றனர். அப்போது தம்பி கால் தவறி நீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற அண்ணன் முயற்சித்ததால், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கஞ்சா விற்றவர் கைது—பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், காலியிடத்தில் நேற்று முன் தினம் இரவு, கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. அங்கு சென்று … Read more