இதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாமே நெல்சன்..!அதுக்குன்னு இப்படியா ?

விஜய்யின்
பீஸ்ட்
படத்தின் ட்ரைலர் தான் தற்போது சமூகத்தளங்களில் ட்ரெண்டாக இருந்துவருகின்றது.
விஜய்
நடித்து வரும் படங்களிலிருந்து ஒரு புகைப்படம் வந்தாலே அதை உலகளவில் ட்ரெண்டாக்கும் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை கொண்டாடி வருகின்றனர்

கிட்டத்தட்ட 3 நிமிடம் ஓடும் ட்ரைலர் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. ட்ரைலரில் விஜய்யை எந்த அளவிற்கு ஸ்டைலாக மற்றும் மாஸாக காட்டமுடியுமா அந்த அளவிற்கு மாஸாக காட்டியுள்ளார்
நெல்சன்
.

பீஸ்ட்ல செல்வராகவனை பார்த்த அவர் ஞாபகம் வருதே…கலக்கத்தில் விஜய் ரசிகர்கள்..!

இதை பார்க்கையில் நெல்சன் தீவிர விஜய் ரசிகற்காக இருப்பார் போல் என ரசிகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.மேலும் வழக்கம்போல பீஸ்ட் ட்ரைலர் பல சாதனைகளை நிகழ்த்திவருகின்றது. என்னதான் பீஸ்ட் ட்ரைலரை புகழ்ந்து பேசினாலும் நாணயத்தில் இருபக்கம் இருப்பது போல பாராட்டுக்கள் இருந்தாலும் விமர்சனங்களும் ஒரு பக்கம் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

பீஸ்ட்

இந்நிலையில் பீஸ்ட் ட்ரைலரை பல ரசிகர்கள் பாராட்டி வரும் நேரத்தில் சில ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர். பீஸ்ட் ட்ரைலரில் விஜய் FIGHTER JET ஓட்டுவது போல ஒரு காட்சி இருக்கும். அதில் விஜய் ஆக்சிஜன் மாஸ்க் மற்றும் ஹெல்மட் இல்லாமல் வெறும் ஹெட் செட் மட்டுமே அணிந்திருக்கிறார்.

பீஸ்ட்

இதனை பார்த்த சில ரசிகர்கள் இந்த காட்சியில் சுத்தமாக லாஜிக் இல்லை என விமர்சித்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் ட்ரைலரை பார்த்தால் இப்படம் ஆங்கில படத்தின் தழுவலாக இருக்குமோ என்றும் சில காட்சிகள் அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்றும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுவான ரசிகர்கள் இந்த லாஜிக் குறைகளெல்லாம் கண்டுகொள்ளாது ட்ரைலரை மட்டும் ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

9 வருஷம் கழிச்சு டிவி நிகழ்ச்சியில் விஜய், தொகுப்பாளர் யாரு தெரியுமா?

அடுத்த செய்திபட வாய்ப்புக்காக அவரை கெட்ட வார்த்தையில் திட்டினேன்….! வெளிப்படையாக பேசிய நடிகை ஐஸ்வர்யா…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.