இலங்கையில் 36 மணிநேர ஊரடங்கு முடிவுக்கு வந்தது

கொழும்பு:
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு அதிபர் அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகளே காரணம் எனக்கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோத்தபய பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் 36 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
 
இந்நிலையில், இலங்கையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான 36 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.